உங்களுக்குப் பிடிச்ச வீரர் யார்.. ஏடாகூட கேள்வி கேட்டு மித்தாலியிடம் வாங்கிக் கட்டிய பாக். நிருபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜிடம், உங்களுக்குப் பிடித்த ஆண் வீரர் யார் என்று கேட்ட பாகிஸ்தான் செய்தியாளர், மித்தாலியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

மித்தாலி தலைமையிலான இந்திய மகளிர் அணி உலகக் கோப்பைப் போட்டிக்காக லண்டனில் முகாமிட்டுள்ளது. மித்தாலிக்கு இது நான்காவது உலகக் கோப்பைப் போட்டியாகும். கேப்டன் பதவியிலிரும், பேட்டிங்கிலும் பலருக்கு முன்னுதாரணமாக இருப்பவர் மித்தாலி.

100 ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து புதிய சாதனை படைத்தவர். சர்வதேச அளவில் இந்த சாதனையைப் படைத்த 3வது வீராங்கனை மித்தாலி. புத்திசாலி கேப்டன், திறமையான வீராங்கனை.

செய்தியாளரின் குசும்பு கேள்வி

செய்தியாளரின் குசும்பு கேள்வி

இந்த நிலையில் லண்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் அணிகளுக்கான இரவு விருந்தின்போது மித்தாலியிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் பாகிஸ்தான செய்தியாளர் ஒருவர்.

தேவையில்லாத ஒப்பீடு

தேவையில்லாத ஒப்பீடு

அந்த செய்தியாளர் தேவையில்லாமல் ஆண் வீரர்களையும், பெண் வீராங்கனைகளையும் ஒப்பிட்டுப் பேசி கேள்வி கேட்டார். கேள்வியின்போது உங்களுக்குப் பிடித்த இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் யார் என்றும் கேட்டார். இதைக் கேட்டு முகம் சுளித்தார் மித்தாலி.

இதைப் போய் அங்க கேளுங்க

இதைப் போய் அங்க கேளுங்க

அந்த செய்தியாளரிடம், இதே கேள்வியை ஒரு வீரரிடம் நீங்க கேட்க முடியுமா. யார் உங்களுக்குப் பிடித்த பெண் வீராங்கனை என்று கேட்க முடியுமா. ஏன் இதை எங்களிடம் மட்டும் கேட்கிறீர்கள் என்று கோபமாகவே கேட்டார்.

முக்கியத்துவம் குறைவு

முக்கியத்துவம் குறைவு

தொடர்ந்து பேசிய மித்தாலி, இந்தியாவில் மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலுமே பெண்கள் கிரிக்கெட்டுக்கு சற்று மவுசு குறைவாகவே உள்ளது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் மகளிர் கிரிக்கெட்டுக்குத் தேவையானதை செய்து வருகிறது. அது பாராட்டுக்குரியது என்றாரி மித்தாலி

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India skipper Mithali Raj posing for media persons ahead of ICC opening dinner and media round-table event. A testimony to her straight forward attitude was her latest interaction with media persons during the opening dinner and media round-table event ahead of the global ICC tournament. The Indian skipper slammed a Pakistani journalist for comparing women cricketers with male cricketers.
Please Wait while comments are loading...