இந்தியா - பாகிஸ்தான் பைனல்... டெல்லி, மும்பை ஹோட்டல்களில் சிறப்பு ஏற்பாடு, சலுகை மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா பாகிஸ்தான் இடையே இன்று நடைபெற உள்ள விறுவிறுப்பான போட்டியை முன்னிட்டு டெல்லி, மும்பை உணவுவிடுதிகள் இதை பயன்படுத்தி சலுகை விலையில் உணவு விற்பனையை அறிவித்துள்ளன.

இங்கிலாந்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் போட்டியில் டாப்-8 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ஏ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், பி'பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

கடந்த 12-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் ஏ பிரிவில் இருந்து இங்கிலாந்து, வங்காளதேசமும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் அரை இறுதிக்கு முன்னேறின. கடந்த 14-ந் தேதி நடந்த முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் இங்கிலாந்தையும், 15-ந் தேதி நடந்த 2-வது அரை இறுதியில் இந்தியா வங்காளதேசத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

 ஆவலுடன் எதிர்பார்ப்பு

ஆவலுடன் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. கோப்பையை வெல்வதற்கான இந்தப் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியா - சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

 ஜெர்சி டி-சர்ட்

ஜெர்சி டி-சர்ட்

இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்தப் போட்டியை முன்னிட்டு டெல்லி, மும்பையில் உள்ள சில ஓட்டல்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. டெல்லியில் ராஜஸ்தான் பேலஸ் என்ற ஓட்டலில் 3 பெரிய திரைகளில் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. இதனை காண வரும் ரசிகர்களுக்கு ஓட்டல் சார்பில் இந்திய அணியின் ஜெர்சி டி-சர்ட் வழங்கப்படுகிறது.

 சிக்கருக்கு சலுகை விலையில் உணவு

சிக்கருக்கு சலுகை விலையில் உணவு

தர்சி பார் மற்றும் கிச்சன் என்ற ஓட்டல் ஆட்டத்தின்போது பாகிஸ்தான் அணியில் விழும் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் 5 முதல் 20 சதவீதம் வரை உணவில் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்திய அணியின் பேட்ஸ்மேன் குவிக்கும் ஒவ்வொரு பவுண்டரி மற்றும் சிக்சருக்கு சைவ மற்றும் அசைவ ஸ்டார்டர்கள் பாதி விலையில் வழங்கப்படுமாம். ஆக சிக்சர் பறந்தால் பாதி விலையில் சிக்கன் உள்ளிட்ட உணவு ஐட்டங்கள் கிடைக்கும்.

 ஸ்டேடியம் போன்ற செட்

ஸ்டேடியம் போன்ற செட்

டெல்லியில் பஸ்சிம் விஹாரில் உள்ள ரேடிசன் ப்ளூ ஓட்டலும் ரூ. 999 விலையில் உற்சாக பானத்துடன் சைவ, அசைவ சாப்பாட்டு சலுகையை அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் நேரடியாக சென்று போட்டியை காணுவது போன்ற அனுபவத்தை ஏற்படுத்த சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 மும்பை ஓட்டல்களிலும் சலுகை

மும்பை ஓட்டல்களிலும் சலுகை

இதே போன்று மும்பையை சேர்ந்த ஓட்டல் ஒன்றும் ரூ. 1000 மதிப்பிலான உணவை சலுகை விலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக விளம்பரம் செய்துள்ளது. சுமார் 8 உணவு விடுதிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்காக உணவு மற்றும் உற்சாக பானங்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்காக

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதைவிட வேறு எதுவுமே பெரியது இல்லை. நாங்கள் அனைவருமே இந்தியாவின் வெற்றிக்கு அணிவகுத்து நிற்கிறோம் இதை வெளிக்காட்டவே இந்த சலுகைகள் என்று கூறினாலும், அவர்கள் வியாபார யுக்தியும் இதில் மறைந்திருப்பதை மறுக்க முடியாது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
To take the excitement of India Pakistan final match, some of the best restaurant deals across Delhi-NCR and Mumbai that with Cricket match screenings
Please Wait while comments are loading...