ஆப்கானிஸ்தானின் டோணிக்கு இப்படியா ஆகனும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: ஆப்கானிஸ்தானின் டோணி என்று அழைக்கப்பட்ட முகமது ஷெஷாத் ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக ஐசிசி தடைக்குள்ளாகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தேசிய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளங்கியவர் முகமது ஷெஷாத். இவர் போதை மருந்து உட்கொண்டதாக வந்த புகாரை தொடர்ந்து, துபாயில் 3 மாதங்கள் முன்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

MS Dhoni of Afghanistan Mohammad Shahzad fails dope test, banned by ICC

பரிசோதனை ரிசல்ட் தற்போது வந்துள்ள நிலையில், அவரை அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் சஸ்பெண்ட் செய்து, ஐசிசி உத்தரவிட்டுள்ளது. வரும் 26ம் தேதி முதல் அவர் மீதான சஸ்பெண்ட் தண்டனை அமலுக்கு வரும்.

ஆப்கானிஸ்தான் அணியின், டோணி என இவர் அழைக்கப்பட்டு வந்தார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்பதற்காக மட்டுமின்றி, டோணியை போலவே அச்சு அசலாக ஹெலிகாப்டர் ஷாட்டுகளை அடிக்க கூடியவர் என்பதும் இதற்கு காரணம்.

29 வயதாகும் ஷெஷாத் கடந்த டி20 உலக கோப்பை தொடரில் 4 அரை சதங்கள் விளாசினார். இதன் மூலம் 3 அரை சதங்ள் விளாசிய விராட் கோஹ்லியின் சாதனையை அவர் முந்தியிருந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MS Dhoni of Afghanistan Mohammad Shahzad fails dope test, banned by ICC. The ICC announced that Afghanistan's wicketkeeper-batsman Mohammad Shahzad has been charged with an anti-doping rule violation under the ICC Anti-Doping Code.
Please Wait while comments are loading...