For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டமால், டுமீல்..சுட்டுத் தள்ளிய டோணி.. வைரலாகும் போட்டோ

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கான பயிற்சியாட்டம் மழையால் தடைபட்டதால் டோணி கொல்கத்தா போலீஸ் பயிற்சி மையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார்.

By Gajalakshmi

கொல்கத்தா : ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிக்கான பயிற்சி ஆட்டம் மழையால் தடைபட்டதால் கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் டோணி துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரண்டாவது ஆட்டத்தில் கடுமையான போட்டி நிலவும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டிக்காக பயிற்சிகளை மேற்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி கடந்த திங்கட்கிழமையே கொல்கத்தா சென்று விட்டது.

ஆனால் அங்கு மழை பெய்து வருவதால் நேற்று இந்திய அணி பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கிரிக்கெட் பயிற்சி தடைபட்ட காரணத்தால் முன்னாள் கேப்டன் டோணி கொல்கத்தாவில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூடும் பயிற்சியில் ஈடுபட்டார்.

துப்பாக்கி பயிற்சி செய்த டோணி

துல்லியமாக குறி பார்த்து சுடும் டோணியின் பயிற்சி வீடியோ கொல்கத்தா போலீஸ் பயிற்சி பள்ளி டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரான டோணி ஒரு நாள் போட்டியில் 100 ஸ்டம்ப்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்பதோடு, 100 சர்வதேச 50களை தட்டிய நான்காவது இந்தியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

 சிறந்த வீரர்

சிறந்த வீரர்

நேற்று தான் டோணியை பத்மபூஷன் விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவின் மிக உயரிய மூன்றாவது பெரிய விருதான பத்மபூஷன் விரு டோணிக்கு கிடைத்தால் அந்த விருதைப் பெற்ற 11வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

 வரலாற்று சிறப்பு ஸ்கோர்கள்

வரலாற்று சிறப்பு ஸ்கோர்கள்

டோணி 302 ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் விளையாடி 9737 ரன்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் 4876 ரன்கனையும் குவித்து வைத்துள்ளார். இதே போன்ற 78 டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1212 ரன்களை எடுத்துள்ளார். டோணி 16 சர்வதேச போட்டிகளில் (6 டெஸ்ட் மற்றும் 10 ஒரு நாள் போட்டி) சதமும், 100 சர்வதேச போட்டிகளில் அரை சதமும் அடித்துள்ளார். விக்கெட் கீப்பராக டோணி 584 கேட்ச்சுகளை(256 டெஸ்ம், 285 ஒரு நாள் போட்டி மற்றும் 43 டி 20 சர்வதேச போட்டி) பெற்றுள்ளார்.

 ஆஸி. அணியும் கொண்டாட்டம்

ஆஸி. அணியும் கொண்டாட்டம்

இதற்கு முன்னர் டோணி ஈடன் கார்டன் மைதானத்தில் தன்னுடைய குழுவினருடன் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்த காட்சிகள் வெளியாகியிருந்தன. தனக்கு எந்த விளையாட்டும் தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாகவே இது பார்க்கப்பட்டது. இதே போன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் கொல்கத்தாவில் நவராத்திரி பூஜையை யொட்டி செய்யப்படும் ஏற்பாடுகளை பார்த்து மகிழ்ந்தனர்.

Story first published: Thursday, September 21, 2017, 11:46 [IST]
Other articles published on Sep 21, 2017
English summary
MS Dhoni went to Kolkata Police's state-of-the-art range to do some shooting practice as rain ruined India's practice session at the Eden Gardens ahead of the second ODI against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X