பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் மகனை கொஞ்சும் பாசக்கார டோணி.. வைரல் போட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் மகனை, இந்திய முன்னாள் கேப்டன் டோணி தூக்கி வைத்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் வெகு காலத்திற்கு பிறகு நாளை நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. இவ்விரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.

 MS Dhoni’s photo with Sarfraz Ahmed’s son

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் இடையே சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சாதாரண லீக் போட்டியில் மோதினாலே அனல் பறக்கும். அதுவும் இறுதிப் போட்டி என்றால் சொல்லவே வேண்டாம்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டை பொறுத்த வரை, பாகிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. உலகக் கோப்பைக்கு அடுத்தபடியாக மதிப்புமிக்கதாக கருதப்படும் ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் பைனலில் மோதுவது இதுவே முதல் முறையாகும். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இரு அணிகளும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ரஸ் அகமது டோணியைத்தான் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டிருக்கும் தகவல் வெளியாகியிருந்தது. இதற்கிடையில் சர்ப்ரஸ் அகமது மகன் அப்துல்லாவை டோணி தூக்கி வைத்திருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இந்த போட்டோவை மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை மற்றவர்களும் ஷேர் செய்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Indian skipper MS Dhoni clicked a photo with Pakistan captain Sarfraz Ahmed's son Abdullah
Please Wait while comments are loading...