நீயா ஒத்துக்கற வரைக்கும் எவனாலும் உன்ன ஜெயிக்க முடியாது.. அந்த தல சொன்னாரு, இந்த தல செஞ்சிட்டாரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட, தோத்துட்டன்னு உன் முன்னாடி வந்து நின்றாலும் நீ ஒத்துக்கற வரைக்கும் எவனாலும் எங்கயும் எப்போதும் உன்ன ஜெயிக்க முடியாது" என்ற விவேகம் திரைப்படத்தின் தல அஜித் வசனம் வேறு யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தல டோணிக்கு பொருந்தியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் வெறும் 240 ரன்கள்தான் எடுத்திருந்தார் டோணி. ஒரு போட்டியில்தான் அரை சதம் கடந்தார்.

எப்படி இருந்தாலும், டோணி எந்த மைதானத்தில் களமிறங்கினாலும், அங்கு ரசிகர்கள் டோணி, டோணி என்ற கோஷம் விண்ணை முட்டுகிறது. ரன்னே அடிக்காவிட்டாலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறதே என்ற ஆதங்கம் உலகின் அத்தனை பிளேயர்களுக்கும் இருந்தது.

கிளாஸ் வீரர்

கிளாஸ் வீரர்

கிரிக்கெட் உலகில் ஒரு வார்த்தை பிரபலம். "Form is temporary, class is permanent". அந்த வார்த்தையின் வடிவம்தான் டோணி. அவரின் உள்ளே இன்னமும் எஞ்சியுள்ள பினிஷருக்குத்தான் இந்தியாவே மரியாதை கொடுக்கிறது. ஃபார்மில் இல்லாவிட்டாலும், சச்சின் சச்சின்தான், டோணி டோணிதான். அவர்களின் கிளாஸ் ஆட்டத்தை வேறு யாரும் ஜெராக்ஸ் எடுத்துவிட முடியாது.

டீமிலேயே கேலி

டீமிலேயே கேலி

ஆனால், உள்ளூர் ஆட்டக்காரரை உள்ளூர் ஆட்டக்காரர்தான் மதிக்கனும் என்ற கரகாட்டக்காரன் பட வசனம் அறியாதவர் ஹர்ஷ் கோயங்கா. சொந்த அணி வீரரான டோணியையே ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பதாக கிண்டல் செய்தார்.

பாய்ந்த டோணி

பாய்ந்த டோணி

ஆனால் டோணி முக்கியமான நேரத்தில் புயலை கிளப்பிவிட்டார். அனைத்து வீரர்களும் ஸ்லோ பிட்சில் பேட் செய்ய சிரமப்பட்டனர். டோணியும் அப்படித்தான். ஆனால் அவர் சளைக்கவில்லை. பொறுத்திருந்து பாய்வோம் என முடிவெடுத்தார். 18வது ஓவருக்கு பிறகு பொங்கிவிட்டார். மொத்தம் 5 சிக்சர், அத்தனையும் அடடே ரகம்.

சச்சின், டோணி

சச்சின், டோணி

முக்கியமான கட்டத்தில் அணிக்கு கை கொடுப்பவர்களே லெஜன்ட் ஆகிறார்கள். சார்ஜா கோப்பையில் சச்சின் ஆடியதை போல. 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் டோணி விளாசியதை போல. நேற்றும் தான் லெஜன்ட் என்பதை நிரூபித்தார்.

7வது முறை சாதனை

7வது முறை சாதனை

டோணி ஜெர்சி எண் 7. அவர் 7வது முறையாக ஐபிஎல் பைனலுக்குள் செல்ல உள்ளதை சரியாக குறிக்கிறது என பூரிக்கிறார்கள் ரசிகர்கள். இது சாதனை. சிஎஸ்கே அணிக்காக 6 முறை பைனலுக்குள் சென்றவர் டோணி. அவரோடு இளவல் ரெய்னாவும் அத்தனை முறை பைனலுக்குள் சென்றார். இம்முறை குஜராத்திற்காக அவர் கேப்டனாக ஆடியதால் அந்த சாதனையை தவறவிட்டுவிட்டார்.

புத்தியை தீட்டனும்

புத்தியை தீட்டனும்

கோஹ்லி சிறந்த வீரர்தான். டிவில்லியர்ஸ் 360 டிகிரி வீரர்தான். உலகின் ஆபத்தான் டி20 வீரர் கெய்ல். மெக்கல்லம், மேக்ஸ்வெல் என உலக கிரிக்கெட்டை கதிகலக்கும் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் டோணியால் மட்டுமே 7 முறை ஐபிஎல் பைனலுக்குள் செல்ல முடிந்துள்ளதே காரணம் என்ன? அதிருஷ்டமா? இருக்காது. 7 முறையும் அதிருஷ்டம் அவருக்கு மட்டுமே அடித்துக்கொண்டிருக்காது. வீரம் மட்டுமல்ல விவேகத்தோடு செயல்படுவதுதான் டோணியின் வெற்றி ஃபார்முலா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mahendra Singh Dhoni set another record in the Indian Premier League (IPL) after Rising Pune Supergiant entered the final.
Please Wait while comments are loading...