சூறாவளியாக சுழன்ற கரண் சர்மா, பும்ரா.. சுருண்டது கொல்கத்தா டாப் ஆர்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கரண் ஷர்மா, பும்ராவின் அபாரமாக பந்துவீ்ச்சில் கொல்கத்தாவுக்கு எதிரான 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி20 தொடர் கிரிக்கெட்டின் 2வது தகுதிச் சுற்றில், கொல்கத்தாவிற்கு எதிராக டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது மும்பை. அதன்படி கொல்கத்தா அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்கள்.

Mumbai Vs Kolkata; Karn Sharma shines for MI

பும்ப்ரா, கரண் ஷர்மா அபார பந்துவீச்சால் ஆரம்பமே கொல்கத்தாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 2-வது ஓவரில் கிறிஸ் லின் 4 ரன்கள் எடுத்த நிலையில் பும்ப்ரா பந்தில் அவுட்டானார். சுனில் நரைன் 10 ரன்கள் எடுத்த நிலையில் கரண் ஷர்மா பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.

அடுத்து வந்த உத்தப்பா 1 ரன்னிலும், கம்பீர் 12 ரன்னிலும், கிராண்ட்ஹோம் டக் அவுட் முறையிலும் வெளியேறினர். இதனால் 31 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து பரிதவித்தது கொல்கத்தா.

6-வது விக்கெட்டுக்கு ஜக்கி உடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு ரன்களை சேர்த்தது. அணியின் ஸ்கோர் 87 ரன்னாக இருக்கும்போது ஜக்கி 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 31 ரன்கள் எடுத்தார்.

இதனால் கொல்கத்தா அணி 18.5 ஓவரில் 107 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய மும்பை 14.3 ஓவரில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கரண் ஷர்மா, பும்ராவின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தாவின் டாப் ஆர்டர்கள் வரிசையாக சரிந்தது. சுழலில் கலக்கிய கரண் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். இதேபோல் 3 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டை சாய்த்தார். ஜான்சன் 2 விக்கெட்டும், மலிங்கா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஒட்டு மொத்தமாக மும்பையின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Young leg-spinner Karn Sharma was the wrecker-in-chief as Mumbai restricted Kolkata to a paltry total in the virtual semi-final at M Chinnaswamy Stadium.
Please Wait while comments are loading...