அப்பாடா.. முஷ்பிகுர் ரஹீம் அவுட்டாயிட்டார் மக்களே.. ரிலாக்ஸ் ஆகுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிர்மிங்காம்: இந்திய பந்து வீச்சாளர்களைப் பாடாய்ப்படுத்திய விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் ஒரு வழியாக அவுட்டாகி விட்டார். நிச்சயம் இந்தியாவுக்கு இது திருப்புமுனை விக்கெட்டாகும்.

தமிம் இக்பாலும், முஷ்பிகுரும் இணைந்து இந்திய பந்து வீச்சாளர்களை இன்று பதம் பார்த்து விட்டனர். வந்த பந்தையெல்லாம் வெளுத்து ரன் குவித்த அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய தரப்பு தடுமாறியது. இந்த நிலையில்தான் கேதார் ஜாதவ் வந்து இக்பாலை 70 ரன்களில் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

Mushfiqur Rahim departs

மறுபக்கம் முஷ்பிகுர் ரஹீம் வெளுத்தார். அவரை அவுட்டாக்க இந்திய தரப்பு சற்றே போராடியது. கடைசியில் 61 ரன்கள் எடுத்த நிலையில் அதே கேதார் ஜாதவ் பந்து வீச்சில் விராத் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரஹீம்.

இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்தியத் தரப்பில் பெரிய பதட்டம் தணிந்தது. தற்போது வேறு யாரேனும் புதிதாக அதிரடி பார்ட்னர்ஷிப்பை அமைத்து விடாமல் போராடித் தடுக்க வேண்டிய இக்கட்டில் இந்தியா உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bangladesh Wicket Keeper Mushfiqur Rahim has beene departed after slamming a fine 61 runs.
Please Wait while comments are loading...