டோணி மனைவியும், இரு மகன்களும்.. வைரலாகும் போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

போர்ட் ஆஃப் ஸ்பைஸ்: மகேந்திர சிங் டோணி- சாக்ஷி தம்பதிக்கு மகள் மட்டுமே உள்ள நிலையில் இரு சிறுவர்களுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அவர்களை இரு மகன்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி முடிந்தவுடன் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள சென்றது. அங்கு டிரினிட்டாட்டில் இரு சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. அப்போது தவான், ரஹானே, டோணி ஆகியோர் தங்கள் குடும்பம் சகிதமாக டுவைன் பிராவோவின் வீட்டிற்கு சென்றனர்.

 "My boys" says Sakshi Singh while sharing a picture

அங்கு அவரது குழந்தைகளுடன் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். அதிலும் சாக்ஷி வெளியிட்டுள்ள படம்தான் மிகவும் சுவாரஸ்யமான படம்.

விசித்திரமான முகபாவனைகளுடன் போஸ் கொடுத்த அந்த குழந்தைகளுடன் ரசித்தபடியே போட்டோ எடுத்துக் கொண்ட சாக்ஷி, போட்டோவின் கீழ் எனது மன்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

டோணி- சாக்ஷி தம்பதிக்கு மகள் தானே. அது யார் புது மகன்கள் என்று ஆராய்ந்தபோதுதான் அவர்கள் இருவரும் தவான் மற்றும் பிராவோவின் மகன்கள் என்று தெரிய வந்தது. இதில் என்ன தவறு. பெண் குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு நெருக்கமான உறவினர் அல்லது நண்பர்களின் பெண் குழந்தைகளை நம் குழந்தை என்பதை போல் தான் இதுவும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sakshi singh share a Instagram selfie with Shikhar Dhawan's son Zoravar and West Indies cricketer Dwayne Bravo's child which she captioned "My two boys !!! #dhawanjr #bravojr !".
Please Wait while comments are loading...