என்னாமா கலாய்க்கிறாருப்பா நம்ம ஷேவாக்.. சான்ஸே இல்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நான் 2 லைனில் அப்ளிகேஷனை அனுப்பி வைத்ததாக கூறுவதில் உண்மை இல்லை. அப்படி அனுப்புவதாக இருந்தால் எனது பெயர் மட்டுமே போதுமே.. என்று வழக்கம் போல கலாய்த்துள்ளார் வீரேந்திர ஷேவாக்.

முன்பு பேட்டிங்கில் அதிரடி, இப்போது காமெடியில் சரவெடி.. இதுதான் ஷேவாக். டிவிட்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார் மனிதர். இந்த நிலையில் சமீபத்தில் இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பிய அவரது பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் கலகலப்பை ஏற்படுத்தியது.

அதில் தன்னைப் பற்றி வெறும் 2 வரிகளில் ஷேவாக் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் கலகலப்புடன், கூடவே பரபரப்பும் ஏறப்ட்டது. ஆனால் அதெல்லாம் இல்லை என்று கூறி மறுத்துள்ளார் ஷேவாக். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து..

முறையாகத்தான் அனுப்பியிருக்கேன்

முறையாகத்தான் அனுப்பியிருக்கேன்

கிரிக்கெட் வாரிய விதிமுறைக்குட்பட்டுத்தான் நான் அப்ளிகேஷனை அனுப்பியுள்ளேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நான் 2 வரியில் அனுப்பிய பயோடேட்டாவை யாராவது எனக்குக் கொடுத்தால் மகிழச்சி அடைவேன்.,

பெயர் மட்டும் போதாதா

பெயர் மட்டும் போதாதா

அப்படியே நான் 2 வரியில் அனுப்புவதாக இருந்தால் எதற்காக பயோடேட்டா அனுப்ப வேண்டும். எனது பெயர் மட்டும் போதாதா.

கங்குலி பெஸ்ட் கேப்டன்

கங்குலி பெஸ்ட் கேப்டன்

என்னைப் பொறுத்தவரை கங்குலிதான பெஸ்ட் கேப்டன். அவர்தான் என்னையும் பக்குவப்படுத்தினார். எனது பொறுமை உணர்வை அதிகரிக்க உதவினார். மிகச் சிறந்த கேப்டன் என்றால் அவர்தான்.

சச்சின் முக்கியம்

சச்சின் முக்கியம்

அதேபோல சச்சின் டெண்டுல்கர். அவர் எனது வழிகாட்டியும் கூட. எனது கிரிக்கெட் முன்னேற்றத்திற்கு சச்சினும் ஒரு முக்கியக் காரணம். எனக்குள் நம்பிக்கையை விதைத்தார். எனது மூட நம்பிக்கைகளை உடைத்தவர் அவர் என்றார் ஷேவாக்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sehwag has refused that he had sent a 2 line CV to apply for the post of Indian team Coach.
Please Wait while comments are loading...