அரை சதம் போட்ட கையோடு ஆட்டமிழந்து வெளியேறிய நதாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து ஆல் ரவுண்டர் நதாலி ஸ்கிவர், இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சை சமாளித்து அரை சதம் விளாசி இங்கிலாந்தின் நிலையை ஸ்திரப்படுத்தினார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி லண்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.

Natalie Sciver slams half century

முன்னணி வீராங்கனைகளை இந்திய பவுலர்கள் பதம் பார்த்த நிலையில் ஆல்ரவுண்டர் நதாலி ஸ்கிவர் சமாளித்து ஆடி அரை சதம் போட்டு அணியை ஸ்திரப்படுத்தினார்.

இங்கிலாந்தின் அரை இறுதிப் போட்டியிலும் கூட இவர்தான் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். இந்த நிலையில் இன்றைய இறுதிப் போட்டியிலும் ஸ்கிவரே சிறப்பாக ஆடினார். ஸ்கிவரும், சாரா டெய்லரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பைக் கொடுத்தனர்.

சாரா டெய்லர் 45 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ரன் குவிப்பை ஸ்கிவர் தன்வசம் ஏற்றார். சிறப்பாக ஆடி அரை சதம் போட்ட அவர் ஜூலன் கோஸ்வாமி பந்தில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
English all rounder Natalie Sciver slammed a stylish half century in the finals against India in the WWC.
Please Wait while comments are loading...