அவுட் ஆப் பார்ம்லயே 81%.. பார்ம்ல இருந்தா நீங்களாம் செத்திங்க.. டோணியை கொண்டாடும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்பை இந்தியன் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. டோணியே இதற்கு காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோணி நீக்கப்பட்டு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸமித், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தவே ஸ்மீத்தை பாராட்டியும் டோணியை குறைகூறியும் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா சகோதரர் ஹர்ஷ் கோயங்கா டிவீட் செய்திருந்தார்.

இதனால் டோணியின் ரசிகர்கள் பொங்கி எழுந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற முக்கியமான குவாலிபையர் ஆட்டத்தில் டோணி 26 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்கள் எடுத்து அவுட்டாகமால் இருந்தார்.

டோணியின் அனல் பறக்கும் ஆட்டத்தால்தான் புனே அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

அவுட் ஆப் பார்ம்லயே..

அவுட் ஆப் பார்ம்லயே 81% பார்ம்ல இருந்தா நீங்களாம் செத்திங்க #தோனிடா என பெருமித்துக்கொள்கிறார் இந்த நெட்டிசன்..

இரண்டுமே நாங்க தான்

சென்னை சூப்பர் கிங்ஸ் நாங்க தான் ஆர்பிஎஸும் நாங்க தான் #தோனிடா என டோணியை கொண்டாடுகிறார் இந்த வலைஞர்..

பாகுபலி

அமரேந்திர பாகுபலியை (சிஎஸ்கே) சூழ்ச்சி செய்து வென்றுவிடலாம்...பழிக்கு பழி வாங்க மகேந்திர பாகுபலி (ஆர்பிஎஸ்) கண்டிப்பாக வருவான்... என பாகுபலி படத்தோடு ஒப்பிட்டு டிவீட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்

என்னடா செய்யணும்ன்றிங்க?

25 பந்துக்கு நாப்பது ரன்னு அதுல அஞ்சு சிக்ஸு... 13 வது ஓவர்ல இறங்கி இதுக்கு மேல என்னடா செய்யணும்ன்றிங்க? என டோணியின் பெருமையை கூறுகிறார் இந்த வலைஞர்..

தோனிடா...

#தோனிடா என சூப்பர் ஸ்டாரின் கபாலி பட டயலாக்கை ஒரு வார்த்தையில் கூறி டோணியின் வெயிட்டை காட்டுகிறார் இந்த நெட்டிசன்..

தலைவன் அடிச்சி அமுக்கிப்புட்டான்

கடைசி 8 பந்தகளில் 4 சிக்ஸு...
மும்பை இந்தியன்ஸ் மண்டையனுங்க மண்ணோட மண்ணா போற அளவுக்கு முதல் இன்னிங்சுலயே தலைவன் அடிச்சி அமுக்கிப்புட்டான்
#தோனிடா..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens celebrating Dhoni's yesterday's game against Mumbai Indians. In Social Medias Dhoni's fans praising him.
Please Wait while comments are loading...