மரியாதை தெரியாதவர்... கர்வம் பிடித்தவர்.. நீக்குங்கள்.. கோஹ்லியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது அவரை வரவேற்று போட்ட டிவீட்டை கோஹ்லி அழித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராத் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதலால் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுவே ரசிகளிடம் கோஹ்லி மீது கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது அதை வரவேற்று போட்ட டிவீட்டை கோஹ்லி நேற்று அழித்து விட்டார் இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கோஹ்லி மீதான வெறுப்பை அதிகரித்துள்ளது. சிறுபிள்ளைதனமாக நடந்துகொள்கிறார் எனவும் கர்வம் பிடித்தவர் என்றும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

கர்வம் வீழ்ச்சியைதான் தரும்

விராட் கோஹ்லி போன்ற ஒருவரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும். முற்றிலும் அவமானகரமான நடத்தை... கர்வம் எப்போதும் வீழ்ச்சியைதான் தரும்.. நினைவில் கொள்ளுங்கள் என்கிறார் இந்த நெட்டிசன்..

அவரை வெளியேற்றுங்கள்..

இந்திய கேப்டன்களிலேயே கொஞ்சமும் மரியாதை தெரியாதவர் விராட் கோஹ்லி என்று நினைக்கிறேன்.. டோணி, கங்குலி, அசார் மற்றும் ராகுல் இடத்தில் அவரை வைத்து பார்க்க முடியவில்லை.. அவரை வெளியேற்றுங்கள்.. என்கிறார் இந்த வலைஞர்..

நீக்கப்பட வேண்டும்..

பயிற்சியாளருக்குப் பதிலாக கோஹ்லி நீக்கப்பட வேண்டும்.. நாட்டில் எத்தனையோ திறமையானவர்கள் உள்ளனர்.. என்கிறார் இந்த நெட்டிசன்..

கர்வம் பிடித்த கோஹ்லி

கர்வம் பிடித்த கோஹ்லியை விட ஜம்போ இந்திய கிரிக்கெட் மீது அதிக மரியாதை கொண்டவர்... என்கிறார் இந்த நெட்டிசன்...

எவ்வளவு கர்வம் பிடித்தவர்

கோஹ்லி எவ்வளவு கர்வம் பிடித்தவர் என்பதை இது காட்டுகிறது என்கிறார் இந்த வலைஞர்..

குழந்தைத்தனமா இருக்கு..

குழந்தைத்தனமா இருக்கு.. பக்குவமில்லை... என்கிறார் இந்த நெட்டிசன்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens shows angry on Virat kohli for deleting welcome tweet for Kumble. Cricket fans urging to remove virat kohli from the Indian cricket team.
Please Wait while comments are loading...