கபில் தேவின் சாதனையை முறியடித்த மூன்று பவுலர்கள்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

கோல்கத்தா: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வீழ்த்தினர். இதன் மூலம் புவனேஷ்குமார், முகமது சமி, உமேஷ் யாதவ் இணைந்து கபில் தேவின் சாதனையை முறியடித்தனர்.

இந்தியா, இலங்கைக்கு இடையேயான மூன்று டெஸ்ட்கள் கொண்ட போட்டித் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கோல்கத்தாவில் நடந்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Pacers break record

புவனேஷ்குமார், முகமது ஷபி தலா நான்கு விக்கெட்களையும், உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம், ஒரு இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்திய சாதனை மீண்டும் புரியப்பட்டுள்ளது.

இதற்கு முன், 1983ல் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக, ஆமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில், கபில் தேவ் 83 ரன்கள் கொடுத்து, 9 விக்கெட்களை வீழ்த்தினார். பி.எஸ். சாந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

அதற்கு முன், 1981ல், மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியி்ன் இரண்டாவது இன்னிங்சில், கபில்தேவ் மற்றும் மதன்லால் தலா 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.


வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian Pacers create new bowling record
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற