பாகிஸ்தான் ஃபீல்டர்களிடம் ஒரு ஃபயர் தெரியுதே கவனிச்சீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: லீக் ஆட்டம் போல இன்றி, பாகிஸ்தான் அணியில் இப்போது ஒரு ஃபயர் தெரிகிறது.

சாம்பியன்ஸ் டிராபி லீக் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பி பிரிவில் இடம் பெற்றிருந்தன. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் இந்தியாவிடம் 124 ரன்கள் வித்தியாசத்தில் படு மோசமாக தோற்றது.

பாகிஸ்தான் மொத்தமாக இந்தியாவிடம் சரணடைந்துவிட்டதாக முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கேலி செய்தனர். ஆனால், இன்றைய பைனலில் பாகிஸ்தான் அணி முற்றிலும் மாறிப்போயுள்ளது.

Pakistan bowlers and fielders are in fire against India

அணியிடம் ஒரு ஃபயர் தெரிகிறது. பாகிஸ்தான் வழக்கம்போல சிறப்பாக பவுலிங் செய்தாலும், வழக்கம்போல ஃபீல்டிங்கில் சொதப்பவில்லை. ஃபீல்டிங்கில் தீயாய் வேலைபார்க்கிறார்கள் பாகிஸ்தான் பங்காளிகள்.

கோஹ்லி அடித்த ஆப் ட்ரைவ் மற்றும் தவான் விளாசிய லெக் டிரைவ் ஷாட்டுகளை சோயிப் மாலிக் திறமையாக தடுத்து நிறுத்தினார். இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை அதிகரித்தது.

கோஹ்லியை முந்தைய பந்தில் கேட்ச் பிடிக்காமல் கோட்டை விட்டாலும் அடுத்த பந்திலேயே கோஹ்லியை கேட்ச் பிடித்தனர். தொடர்ந்து அந்த அணி பவுலர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். அவர்களுக்கு ஃபீல்டர்கள் நன்கு சப்போர்ட் செய்கிறார்கள். ஸ்கோர் போர்டில் ரன்கள் அதிகம் குவிக்கப்பட்டிருப்பதும் பாகிஸ்தானுக்கு ஃபையரை உருவாக்கிவிட்டது போலும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India lost its caption Kohli and Rohit Sharma cheeply against Pakistan in the final. Pakistan bowlers andd fielders are in fire.
Please Wait while comments are loading...