பாகிஸ்தான்... பாகிஸ்தான்.... சௌரவ் கங்குலியின் காரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் காரை பாகிஸ்தான் ரசிகர்கள் வழிமறித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள பிர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டியில் ஏ பிரிவில் மோதிய நான்கு அணிகளில் இங்கிலாந்தும், வங்கதேசமும் வெற்றி பெற்றது.

அதேபோல் பி பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இங்கிலாந்தை 8 விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று இறுதி போட்டியில் மோதுகின்றன.

 கங்குலியின் கார்

கங்குலியின் கார்

கெனிங்கடன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் லண்டனில் இந்திய அணி முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஓவல் மையதானத்துக்கு வந்தார். அப்போது அவரது காரை பாகிஸ்தான் ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.

 கொடி பறக்கவிட்டு

கொடி பறக்கவிட்டு

கொடி பறக்கவிட்டு

 புன்முறுவல் பூத்தார்

புன்முறுவல் பூத்தார்

பின்னர் பாகிஸ்தான் ரசிகர்களை பார்த்து கையசைத்த கங்குலி புன்முறுவல் பூத்தப்படி காரில் முன்னோக்கி சென்றார். கடந்த 2007-இல் நடைபெற்ற உலகக் கோப்பை டுவென்டி 20 கோப்பையில் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டியிட்டது.

10 ஆண்டுகள் கழித்து மோதல்

அத்தோடு 10 ஆண்டுகள் கழித்து இன்று சாம்பியன் கோப்பை 2017 இறுதி போட்டி நடைபெறுகிறது. இதனால் இந்த போட்டியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pakistan fans were seen forming a huddle around the former India captain Sourav Ganguly's car outside the stadium and waving Pakistan's flag in celebration.
Please Wait while comments are loading...