சத்தம் போடாமல் 3 சாதனைகளைப் படைத்த பாக்.!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபியை வென்ற மகிழ்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான் சத்தம் போடாமல் 3 சாதனைகளை செய்துள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பேட்டிங், பீல்டிங், பவுலிங்கில் கலக்கிய பாகிஸ்தான் இந்தியாவை மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் அதாவது 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் வெற்றி பெற்று சாதனை படைத்துள்து.

முதல் கோப்பை

முதல் கோப்பை

பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது இதுவே முதல் முறையாகும். இதன் காரணமாக அந்த நாட்டு ரசிகர்கள் அதை பெருமையாக கொண்டாடி வருகின்றனர்.

1992க்குப் பிறகு முதல் கோப்பை

1992க்குப் பிறகு முதல் கோப்பை

ஒரு நாள் போட்டித் தொடர் ஒன்றில் பாகிஸ்தான் கோப்பையை வெல்வது 1992ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். 1992ம் ஆண்டு இம்ரான் கான் தலைமையில் உலகக் கோப்பையை வென்றிருந்தது பாகிஸ்தான்.

3 கோப்பைகள்

3 கோப்பைகள்

இந்த வெற்றியையும் சேர்த்து ஐசிசியின் முக்கிய கோப்பைகளான உலகக் கோப்பை, டுவென்டி 20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கோப்பைகளையும் பாகிஸ்தான் வென்றுள்ளது.

"வல்லரசு" நாடுகள் வரிசையில்!

இதே சாதனையை இதற்கு முன்பு இந்தியா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் நிகழ்த்தியிருந்தன. அந்த வரிசையில் தற்போது பாகிஸ்தானும் இணைந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
180-run victory over traditional rival India was also Pakistan's first title in a 50-over tournament since winning the ICC Cricket World Cup 1992. They had won the ICC World Twenty20 England 2009, and as such, have become only the fourth side after India, Sri Lanka and the West Indies to win all the 3 ICC majors.
Please Wait while comments are loading...