யார் உங்க அப்பன்? அநாகரீகமாக கூச்சலிட்ட பாக். ரசிகர்! அடிக்க பாய்ந்த முகமது ஷமி-வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா தோற்றதை தொடர்ந்து, பாகிஸ்தான் ரசிகர்களின் கேலிக்கு உள்ளாகியுள்ளனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள். அப்படி ஒரு கேலி கூச்சலின்போது, இந்திய வீரர் முகமது ஷமி, ரசிகரை அடிக்க நெருங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி பைனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. அன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

வரலாற்று ரீதியாக பாகிஸ்தானின் தந்தை இந்தியாதான். மேலும், ஐசிசி போட்டித்தொடர்களில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தது இல்லை. இதையெல்லாம் வைத்து, பாகிஸ்தானுக்கு இந்தியாதான் தந்தை என இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் சேவாக் உள்ளிட்டோர் டிவிட் செய்திருந்தனர்.

தலைகால் புரியவில்லை

தலைகால் புரியவில்லை

ஆனால், சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பாகிஸ்தான் ரசிகர்களோ தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்வை பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல் குதித்தனர்.

வம்பிழுப்பு

வம்பிழுப்பு

மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களிடம், பாகிஸ்தான் ரசிகர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அந்த நாட்டு ரசிகர்கள் இந்திய வீரர்களிடமும் வம்பிழுத்துள்ளனர்.

கேலி, கிண்டல்

கேலி, கிண்டல்

கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பிறகு, சம்பிரதாயமாக இரு அணி வீரர்களும் கை குலுக்கினர். இதன்பிறகு, இந்திய வீரர்கள் அனைவரும் வரிசையாக பெவிலியன் திரும்பினர். அப்போது அவர்கள் நடந்து சென்ற படிக்கட்டை சுற்றியிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீரர்களை கேலியும், கிண்டலும் செய்து கூச்சலிட்டனர்.

கோஹ்லிக்கும் கேலி

கோஹ்லிக்கும் கேலி

கோஹ்லி கடந்து சென்றபோது அவரது பெயரை சொல்லியே கூச்சலிட்டனர் பாகிஸ்தான் ரசிகர்கள். வழக்கமாக மைதானத்தில் கோபத்தோடு காட்சியளிக்கும் கோஹ்லி, பாகிஸ்தான் ரசிகர்கள் கத்தியதை கேட்காததை போலவே கடந்து சென்றுவிட்டார்.

யார் உங்கள் அப்பன்?

இந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நடந்து சென்றபோது, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் "யார் உங்கள் தந்தை" என ஹிந்தியில் கூச்சலிட்டார். சற்று முன்னால் நடந்து சென்ற ஷமி, இதை கேட்டு ஆத்திரமடைந்தார். நின்று, பின்னால் திரும்பி ரசிகர்கள் இருந்த கேலரிக்கு அருகே வந்து முறைத்தபடி, என்ன சொன்னாய் என்பதை போல கேட்டார்.

டோணி தலையீடு

டோணி தலையீடு

இதனால் அங்கு கை கலப்பு ஏற்படும் நிலை உருவானது. ஆனால் பின்னால் நடந்து வந்த டோணி, ஷமியை அமைதிப்படுத்தி, அங்கிருந்து நகர்த்திச் சென்றார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India suffered a loss to Pakistan in the final of the ICC Champions Trophy 2017 and when the Indian team were heading back to the pavilion, a Pakistani fan taunted Mohammed Shami with chants of ‘baap kaun hai’.
Please Wait while comments are loading...