பட்டையை கிளப்பிய பாண்ட்யா.. படுபாதகம் செய்து வீழ்த்திய ஜடேஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஒருபக்கம் விக்கெட்டுகள் சாய்ந்தாலும், அசராமல் அதிரடி ஆட்டம் ஆடி அரை சதம் கடந்தார் ஹர்திக் பாண்ட்யா.

யுவராரஜ், டோடணி வரை, பாதி அணி காலியான பிறகு களம் புகுந்தார் பாண்ட்யா. ஆரம்பம் முதலே அவர் எதைப்பற்றியும் கவலையின்றி தனது வழக்கமான ஷாட்டுகளை ஆடத் தொடங்கினார்.

பாண்ட்யாவின் பலமே கட் ஷாட்டுகளும், லாங் ஆன் சிக்சர்களும்தான். அதிலும் குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக பாண்ட்யா இந்த ஷாட்டுகளை லாவகமாக ஆடினார்.

Pandya brings up his fifty in style

தான் சந்தித்த 32வது பந்தில் சிக்சர் அடித்ததன் மூலம், 54 ரன்களை தொட்டு அரை சதம் கடந்தார் பாண்ட்யா. அதில் 4 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதுவும், அவர் அரை சதம் கடக்கும் முன்பாக தொடர்ந்து 3 சிக்சர்களை விளாசி அசத்தியிருந்தார். ஸ்பின்னர் சதப் கானின் பந்துகளில்தான் இந்த ஹாட்ரிக் சிக்சர்களை அவர் விளாசினார். ஐசிசி பைனல் ஒன்றில் விளாசப்பட்ட அதி விரைவு அரை சதம் இதுவாகும்.

ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் உள்ளது. பாகிஸ்தான் தனது பேட்டிங்கின்போது அதை நிரூபித்தது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் பதற்றத்தில் விரைவில் அவுட்டாகினர். ஆனால், பாண்ட்யா வழக்கமான கூல் தன்மையோடு ஆடி அசத்தினார். ஆனால், எதிர்முனையில் நின்ற ஜடேஜா செய்த முட்டாள்தனத்தால் பாண்ட்யா 76 ரன் எடுத்திருந்தபோது ரன்அவுட் செய்யப்பட்டார். அதற்குள் எதிரணிக்கு கிலியை ஏற்படுத்தி 6 சிக்சர்களையும், 4 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார்.

ஆனால் ஹசன் அலி வீசி பந்தை ஆப்சைடில் ஜடேஜா தட்டிவிட்டு ஓட முயன்றார். இதை நம்பிய பாண்ட்யா ஓடினார். ஆனால், ஜடேஜாவோ ஹபீஸ் கையில் பந்து சிக்கியதை பார்த்து நின்றுவிட்டார். பிறகு தான் அவுட்டாகிவிட கூடாது என சுய நலத்தோடு கிரீசை நோக்கி திரும்பி ஓடினார். பாண்ட்யாவுக்கு முன்பே கிரீசை ஜடேஜா தொட்டுவிட்டார். இந்த நிலையில் பவுலர் பக்கமாக பந்தை எறிந்தார் ஹபீஸ். அதை பிடித்து ஹசன் அலி ரன்அவுட் செய்தார்.

ஆனால் சுய நலத்தோடு ஆடிய ஜடேஜா மேற்கொண்டு ஒரு ரன் கூட சேர்க்கவில்லை. 15 ரன்னில் ஜுனைட் கான் பந்தில் பார்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hat-trick of sixes and Pandya brings up his fifty in style. Fastest in an ICC event final.
Please Wait while comments are loading...