34 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் கேவலமாக விளையாடிய இந்தியாவை மீட்ட கபில்தேவை நினைவுபடுத்திய பாண்ட்யா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 34 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதே ஜூன் 18-ல் படுகேவலமாக விளையாடி அதுவும் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் ஜிம்பாப்வேயை இந்தியா வென்ற வரலாறும் அரங்கேறி இருக்கிறது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட, 175 ரன்கள் குவித்த கபில்தேவை நினைவுபடுத்தினார் இன்றைய ஐசிசி சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் தனியே போராடிய ஹர்திக் பாண்ட்யா.

1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 60 ஓவர்கள் கொண்டதாக இருந்தது. ஜூன் 18-ந் தேதியன்று இந்தியாவும் ஜிம்பாப்வேயும் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஓவரில் 2 பந்துகளை எதிர்கொண்ட கவாஸ்கர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். எக்ஸ்ரா மூலம் 1 ரன் எடுத்திருந்தது இந்தியா.

அடுத்தடுத்து அவுட்

அடுத்தடுத்து அவுட்

அவரைத் தொடர்ந்து 13 பந்துகளை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அவரைத் தொடர்ந்து அமர்நாத் 5 ரன்களிலும் எஸ்எம் பாட்டீல் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். 5-வது விக்கெட்டாக யாஷ்பால் ஷர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்

17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்

அப்போது இந்தியா அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தது. ஆனால் புயலாக விளையாடிய கபில்தேவ் 175 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். ஒருவழியாக இந்திய அணி 60 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழபுக்கு 266 ரன்கள் எடுத்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

பின்னர் ஆடிய ஜிம்பாப்வேயை 57 ஓவர்களில் 235 ரன்களுக்குள் சுருட்டியது இந்தியா வென்றது. அந்த ஆண்டில்தான் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியது.

தனி ஒருவனாக ஹர்திக்

தனி ஒருவனாக ஹர்திக்

அன்றைய நிலையைப் போலவே 75 ரன்களில் 5விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணியை காப்பாற்றும் புயலாக தனி ஒருவனாக போராடினார் ஹர்திக் பாண்ட்யா. அதுவும் ஹாட்ரிக் சிக்சர்கள், பவுண்டரிகள் என பாகிஸ்தானின் பந்துகளை துவம்சம் செய்து சற்றே நம்பிக்கையை துளிர்க்க வைத்திருந்தார்.

தேவையே இல்லாத அவுட்

தேவையே இல்லாத அவுட்

ஆனால் ஹர்திக் பாண்ட்யா தேவையே இல்லாமல் ஜடேஜாவால் அவுட் ஆனார். இதனால் கடும் கோபத்துடன் பாண்ட்யா பெவிலியனுக்கு திரும்பிய சோகம் நிகழ்ந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hardik Pandya who are fighting alone in ICC final against remembering Kapildev's game on 1983 June 18 world cup match against Zimbabwe.
Please Wait while comments are loading...