For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாப்பிள்ள நான்தான்.. அந்த சட்டை என்னோடதில்லை.. இந்திய கிரிக்கெட் சீருடை சர்ச்சை பற்றி பெடரர்!

By Veera Kumar

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது என்னவோ உண்மைதான் என்றாலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு சப்போர்ட் செய்யவில்லை என்று கூறி பாகிஸ்தான் ரசிகர்களை கூல் செய்துள்ளார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்.

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையுடன் இருப்பது போன்ற போட்டோ சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும் வைரலாக பரவிவருகிறது.

இந்திய யூனிபார்முடன் பெடரர்

இந்திய யூனிபார்முடன் பெடரர்

இந்த போட்டோ கடந்த 15ம்தேதி, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்த தினத்தில்தான், நைக் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. பெடரரும் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த போட்டோவை போட்டிருந்தார்.

ஸ்பான்சர் நைக்

ஸ்பான்சர் நைக்

17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரருக்கும், இந்திய கிரிக்கெட் அணிக்கும் நைக் நிறுவனம்தான் ஸ்பான்சராகும். அந்த அடிப்படையில் நைக் தனது நிறுவனத்தை விளம்பரப்படுத்த பெடரர் கையில் இந்திய சீருடையை கொடுத்து அதை பிரபரலப்படுத்தியது. ஆனால் இது தெரியாத பாகிஸ்தான் டென்னிஸ் ரசிகர்கள் பலரும் பெடரை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கினர். பெடரர் தங்கள் நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாக பத்திரிகைகளில் புகார் பெட்டி கடிதம் எழுதி போடும் அளவுக்கு சென்றுவிட்டனர்.

நான் இந்திய ரசிகரே கிடையாது..

நான் இந்திய ரசிகரே கிடையாது..

இந்நிலையில், இன்று துபாய் வந்திருந்த பெடரர் இந்த சர்ச்சை குறித்து கூறியதாவது: நான் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ரசிகர் என்பது உலகறிந்த விஷயம். நான் இந்திய கிரிக்கெட் அணியை சிறு அளவில் மட்டுமே ஆதரிப்பேன். எனவே எனது போட்டோ, தவறான கருத்தை ஏற்படுத்தியிருந்தால், பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பெடரர் தெரிவித்துள்ளார்.

சச்சினின் நண்பர்

பெடரர், இந்திய வீரர் சச்சினுடைய நண்பராகும். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆட வந்திருந்த பெடரரை, விராட் கோஹ்லி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 23, 2015, 17:23 [IST]
Other articles published on Feb 23, 2015
English summary
Tennis superstar Roger Federer has apologised to India and Pakistan cricket fans after he posted a picture with Team India's blue jersey on Facebook during the ICC World Cup 2015.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X