பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுங்கள்... பாக். கேப்டன் சர்பிராஸ் கெஞ்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட்போட்டியில் வெற்றி பெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் வந்து விளையாட வேண்டும் என்று அந்நாட்டு அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கேட்டுக் கொண்டார்.

சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பாகிஸ்தான் அணி பேட் செய்தது.

பிறகு ஒவ்வொரு பந்தையும் மிகவும் நிதானமாக விளையாடிய பாகிஸ்தான் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் பெற்றது.

 ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இதைத் தொடர்ந்து 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது. மேலும் பேட்டிங், பீல்டிங், பவுலிங் உள்ளிட்டவற்றில் இந்தியா சொதப்பியது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இன்று மட்டும் அல்ல

இன்று மட்டும் அல்ல

இந்த வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவிக்கையில், இந்த வெற்றியானது இன்று மட்டுமோ, நாளை மட்டுமோ கொண்டாட வேண்டியது அல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட காலங்களுக்கு இந்த வெற்றி நீங்கா இடம் பெற்றிருக்கும்.

 நாங்களும் சாம்பியன்தான்

நாங்களும் சாம்பியன்தான்

நீண்ட நாள்களாக துபாயை சொந்த கிரவுண்டாக கொண்டு விளையாடி வருகிறோம். இப்போது நாங்களும் சாம்பியன்தான்.

 உற்சாகமாக உள்ளது

உற்சாகமாக உள்ளது

இந்த வெற்றியால் பாகிஸ்தானுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். எனவே மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Through this victory, I would like to appeal to the other teams that please come and play in Pakistan, says Pak captain Sarfraz Ahmed.
Please Wait while comments are loading...