"ஹாட்ரிக் ஒய்டு" வீசி திணறிய பிரவீன் குமார் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பந்துவீசிய குஜராத்தின் பிரவீன் குமார், ஒரு ஓவரில் 10 பந்துகளை வீசினார். அதில் தொடர்ச்சியாக 4 ஒய்டு பாலை வீசினார்.

10வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 176 ரன்களை குவித்தது.

 praveen kumar bowled 10 balls in one over

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் மும்பை அணிக்கு 3வது ஓவரை வீசிய பிரவீன் குமார் தொடர்ந்து 4 ஒயிட் பால் வீசினார். 3வது ஓவரின் முதல் பாலில் 2 ரன்களும், அடுத்த பாலில் 2 ரன்களும் எடுக்கப்பட்டன. அதன் பின் தொடர்ந்து 4 ஒய்டு பாலை வீசினார் பிரவின் குமார.

அதோடு, அவர் வீசிய கடைசி பந்தும் ஒய்டானது. அது பவுண்டரிக்கு வேறு சென்றது. தொடர்ந்து ஒயிட் பால் போட்டு கடுப்பான பிரவீன் குமார், குஜராத் அணியின் மற்ற வீரர்களையும் கடுப்பேற்றினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
praveen kumar bowled 10 balls in one over aganist mumbai indians
Please Wait while comments are loading...