4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்தியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆன்டிகுவா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வென்று இந்திய கிரிக்கெட் அணி தொடரை வெல்லுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேற்கிந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. 5 நாள் ஒருபோட்டிகளைக் கொண்ட தொடரில் இதுவரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

105 ரன்கள் வித்தியாச வெற்றி

105 ரன்கள் வித்தியாச வெற்றி

இரு அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ரத்தானது. 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

251 ரன்கள் குவிப்பு

251 ரன்கள் குவிப்பு

3-வது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. அதில் இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது.

இந்திய அணி முன்னிலை

இந்திய அணி முன்னிலை

அப்போட்டியில் டோணி 78 ரன்கள் குவித்திருந்தார். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியோ 38.1 ஓவர்களிலேயே 158 ரன்களுக்கு சுருண்டுவிட 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. தற்போது இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

4-வது ஒருநாள் போட்டி

4-வது ஒருநாள் போட்டி

இந்நிலையில் ஆன்டிகுவாவில் 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தொடரை சமன் செய்வதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி நிச்சயம் போராடும். இந்திய அணியும் தொடரை கைப்பற்றுவதற்காக உக்கிரம் காட்டும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Foot firmly set on the pedal, a marauding India would be aiming to seal the series with yet another resounding performance against a below-par West Indies in the fourth One-Day International, today
Please Wait while comments are loading...