சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி.. எதிர்பார்ப்புக்கு நடுவே இந்தியா-வங்கதேசம் நாளை மோதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரிமிங்காம்: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-வங்கதேசம் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி நாளை நடைபெறுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பிரிமிங்காமில் நாளை நடைபெற உள்ள 2வது அரையிறுதியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்தியா தனது லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளையும் எளிதாக தோற்கடித்தது. இலங்கைக்கு எதிராக ரன்களை குவித்தும், எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தது.

அதிருஷ்டம்

அதிருஷ்டம்

வங்கதேசத்தை பொறுத்தளவில், மழை காரணமாக கிடைத்த அதிருஷ்டம், அவர்களை அரையிறுதி வரை அழைத்து வந்துள்ளது. ஆஸி.க்கு எதிரான போட்டியில் அந்த அணிக்கு புள்ளிகள் சரிபாதியாக பிரித்துக்கொடுக்கப்பட்டது. நியூசிலாந்தை வங்கதேசம் வீழ்த்தியது.

சண்டைகள்

சண்டைகள்

இந்த இரு அணிகள் நடுவேயும் மலைக்கும்-மடுவுக்குமான திறமை வித்தியாசங்கள் இருப்பினும், ரசிகர் சண்டை காரணமாக இரு அணிகளும் மோதும் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இந்த போட்டியியில் இந்தியா பெறும் வெற்றி என்பது, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி போல தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படாது. ஆனால் தோல்வியோ, பல்வேறு விமர்சனங்களுக்கு காரணமாகிவிடும். கோஹ்லியும்-கும்ப்ளேவும் சண்டை போட்டுக்கொண்டதால்தான் தோற்றதா என்ற ரீதியில் கூட கதைகள் அவிழ்க்கப்படும்.

டெலிகேட் பொசிஷன்

டெலிகேட் பொசிஷன்

இந்திய அணியில் நாளை அஸ்வினுக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்படுவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அஸ்வின் சிறப்பாக செயல்பட்டாலும்கூட, பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிடம் வங்கதேசம் 240 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று துவள, உமேஷ் யாதவ் பந்து வீச்சு முக்கிய காரணம். யாதவ் பந்து வீச்சை கண்டு அஞ்சினர் வங்கதேச வீரர்கள். எனவே இப்போது கோஹ்லிக்கு அணி தேர்வில் பெரும் தர்ம சங்கடம்.

ஆபத்தான அணி

ஆபத்தான அணி

வங்கதேசம் அணி எப்போதுமே ஆபத்தானது. கொஞ்சம் மெத்தனமாக இருந்தாலும், பெரும் அதிர்ச்சிகளை பரிசளிக்க கூடியது. 2007 உலககோப்பையில் இந்தியாவுக்கு அப்படி ஒரு ஆறாத காயத்தை பரிசளித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது வங்கதேசம். ஆனால் இது அரிதான நிகழ்வுதான். இப்போதுள்ள இந்திய அணி அப்படிப்பட்ட எந்த சவாலையும் எதிர்த்து முறியடிக்க கூடிய திறமை கொண்ட ஆல்-ரவுண்ட் அணி. ஆனால் கிரிக்கெட்டில் எதையும் அறுதியிட்டு கூற முடியாது என்பதுதான் இந்த போட்டியின் சுவாரசியம்.

அவர்களுக்கும் வாய்ப்பு இருக்கே

அவர்களுக்கும் வாய்ப்பு இருக்கே

வங்கதேச அணியில் கேப்டன் மஷ்ரபே மொர்டசா, சகிப் அல்ஹசன், முஸ்தபிர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் அச்சுறுத்த கூடியவர்கள். 20 ஓவர் கிரிக்கெட் போல வேகமாக கால்களை முன் நகர்த்தவோ, டெஸ்ட் போட்டியை போல மிகுந்த டெக்னிக்குகளுடன் ஆடவோ தேவையில்லாதது 50 ஓவர் கிரிக்கெட். எனவே இதில்தான் இந்தியாவை வெல்ல வங்கதேசம் முயற்சியாவது செய்ய முடியும் என்பது நிதர்சனம்.

வீரர்கள் ஒப்பீடு

வீரர்கள் ஒப்பீடு

ஒவ்வொரு வீரராக எடுத்து பார்த்தால் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் நடுவே பெரும் இடைவெளி இருப்பதை உணரலாம். தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோரைவிடவும், தவான், ரோகித் ஷர்மா ஜோடி சிறப்பானது.

இந்தியாவின் கைக்கு பலம்

இந்தியாவின் கைக்கு பலம்

இம்ருல் கயேஸ்ஸ மற்றும் சபிர் ரகுமானை விராட் கோஹ்லியின் கிளாஸ்ஸுடன் ஒப்பிட முடியாது. 50 ஓவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான் டோணியோடு முஸ்பிகுர் ரஹிமை ஒப்பிட முடியாது. மகமதுல்லா ரியாத் ஒரு சிறந்த பினிஷராக இருக்கலாம், ஆனால் 300வது போட்டியில் ஆடப்போகும் யுவராஜ்சிங்கின் டிராக்கோடு ஓட முடியாது. மஷ்ரபே, டஸ்கின், ருபெல், முஸ்தபிகுர் சிறந்த பவுலர்களாக இறுக்கலாம். ஆனால், புவனேஸ்வர்குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின் ஆகியோர் அவர்களைவிட சிறந்தவர்கள்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

விராட் கோஹ்லி-கேப்டன், தவான், ரோகித் ஷர்மா, யுவராஜ்சிங், டோணி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, புவனேஸ்வர்குமார், பும்ரா, உமேஷ் யாதவ், அஸ்வின், ரஹானே, தினேஷ் கார்த்திக், முகமது ஷமி.

வங்கதேச அணி விவரம்

வங்கதேச அணி விவரம்

மஷ்ரபே மொர்டசா-கேப்டன், தமிம் இக்பால், இம்ருல் கயேஸ், சவும்யா சர்கார், சபிர் ரஹ்மான், மஹமதுல்லா ரியாத், ஷகிப் அல்ஹசன், முஷ்பிகுர் ரஹிம், ருபல் ஹொசைன், முஸ்தபிசும் ரஹ்மான், டஸ்கின் அகமது, மேதி ஹொசைன் மிராஸ், மொசாடெக் ஹொசைன், சன்சாமுல் இஸ்லாம், சபியுல் இஸ்லாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Professionalism will be pitted against passion when defending champions India square off with Bangladesh in the second semi-final of the ICC Champions Trophy 2017, here tomorrow (June 15).
Please Wait while comments are loading...