இந்தியா-மே.இ. தீவுகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி- களத்துக்கு வருது கெய்ல் புயல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிங்ஸ்டன்: இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று இரவு கிங்ஸ்டனில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் கெய்ல் களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகள் மோதும் 20 ஓவர்கள் போட்டி இன்று நடைபெறுகிறது.

தொடக்க வீரராக கோஹ்லி?

தொடக்க வீரராக கோஹ்லி?

கிங்ஸ்டன் சபீனா பார்க் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி தொடக்க வீரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெய்ல் ரிட்டர்ன்

கெய்ல் ரிட்டர்ன்

மேற்கிந்திய தீவுகள் அணியில் 15 மாதங்களுக்குப் பின்னர் அணிக்கு திரும்பியுள்ளார் கெய்ல். அவரது வருகை இந்திய அணிக்கு நிச்சயம் சவாலாகவே இருக்கும்.

கோஹ்லி- கெய்ல்

கோஹ்லி- கெய்ல்

இந்த போட்டியில் இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணியில் இருந்தவர்கள் கோஹ்லியும் கெய்லும். இன்று இருவரும்

இதுவரை...

இதுவரை...

இரு அணிகளும் 20 ஓவர்கள் போட்டிகளில் ஏழு முறை மோதியுள்ளன. இந்தியா 2 முறையும் மேற்கிந்திய தீவுகள் அணி 4 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எதுவும் இல்லை.

பரபரப்புக்கு பஞ்சமிருக்காது

பரபரப்புக்கு பஞ்சமிருக்காது

ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இறங்கும். இன்று இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பரபரப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Riding high after clinching the One-Day International (ODI) series, the Indian team will look to repeat their performance against West Indies in the one-off Twenty20 International at Sabina Park on today.
Please Wait while comments are loading...