For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்.. கொல்கத்தாவிற்கு மரண அடி.. இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் !

By Karthikeyan

பெங்களூர்: ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

10வது ஐபிஎல் டி20 தொடர் கிரிக்கெட் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

Qualifier 2: Bumrah-Sharma wreak havoc, KKR struggling at 71/5

முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 107 ரன்கள் மட்டும் எடுத்தது. அதிகபட்சமாக ஜாக்கி 28 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும் சேர்த்தனர். மும்பை அணி சார்பில் கரண் சர்மா 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்பின்னர் 108 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 14.3 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 26 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர்.

இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் புனே அணியை மும்பை எதிர்கொள்கிறது.

Story first published: Saturday, May 20, 2017, 1:58 [IST]
Other articles published on May 20, 2017
English summary
Mumbai Indians won the toss and elected to field against Kolkata Knight Riders in the second Qualifier match of the Indian Premier League (IPL) 2017 here on Friday (May 19)
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X