இந்திய ஏ அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிப்பார்: பிசிசிஐ அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய ஏ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Rahul Dravid to continue as India A, U-19 coach

ராகுல் டிராவிட் இந்தியா ஏ அணி பயிற்சியாளராக உள்ளார். அதேபோல 19 வயதுக்கு உட்பட்டோர் அணி பயிற்சியாளராகவும் உள்ளார். அதே நேரம் ஐபிஎல் தொடரின்போது டெல்லி அணி பயிற்சியாளராகவும் உள்ளார். இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்திய ஏ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைவதால் மீண்டும் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BCCI confirms Rahul Dravid to continue as India A, U-19 coach for two more years
Please Wait while comments are loading...