சுழல் புயல் குல்தீப் யாதவின் குருநாதர் யார்? ரெய்னா சொன்ன சீக்ரெட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய அணியில் இலங்கைத் தொடருக்காக அறிமுகப்படுத்தப்பட்டவர் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். தற்போது இவர் அணியில் மிக முக்கியமான பவுலராக உருவாகியிருக்கிறார்.

குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஜோடி இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின் இரட்டையர்கள் என்று செல்லமாக அழைக்கப்டுகின்றனர்.

இந்த நிலையில் குல்தீப் யாதவ் குறித்து இந்திய அணி வீரர் ரெய்னா பேசியிருந்தார். இதில் குல்தீப் யாதவ் பவுலராக மாறியதன் சீக்ரெட் சொல்லி இருக்கிறார்.

 தமிழக வீரர் அஸ்வினுக்கு ஒய்வு

தமிழக வீரர் அஸ்வினுக்கு ஒய்வு

இந்திய அணியில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தவர் தமிழக வீரர் அஸ்வின். இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் இடத்தை இவர் பல காலமாக தன் கையில் வைத்திருந்தார். இவரது தனது திறமையால் ஐசிசியின் தரவரிசையில் முதல் இடம், டெஸ்ட், டி-20யில் சிறப்பான ஆட்டம் என ஒரு ரவுண்ட் வந்தார். இந்த நிலையில் அணியின் கேப்டனாக கோஹ்லி பொறுப்பேற்ற பிறகு அஸ்வினுக்கு அவ்வப்போது ஒய்வு அளிக்கப்படுகிறது. இளம் ஸ்பின் பவுலர்களை தேடும் பணியிலும் இந்திய அணி இறங்கியது.

 புதிய நாயகன்

புதிய நாயகன்

இந்த நிலையில் வாராமல் வந்த மாமணியைப் போல இந்திய அணியில் இணைந்தவர்தான் குல்தீப் யாதவ். அணிக்கு வந்த முதல் போட்டியில் இருந்து தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார் இவர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த இரண்டு வருடங்களாக விளையாடி வரும் இவர் 2017ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடத்த போட்டியில் அறிமுகமானார். அதற்கு முன்பே இவர் 2014ல் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் அதிக விக்கெட் எடுத்து தனி கவனம் ஈர்த்தார்.

 கலக்கும் ஸ்பின் ஜோடி

கலக்கும் ஸ்பின் ஜோடி

தற்போது இந்திய அணியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் குல்தீப் யாதவ் தான் அஸ்வினுக்கு சிறந்த மாற்று என்று அனைவராலும் கூறப்பட்டு வருகின்றது. மேலும் 2014 ஜூனியர் உலகக் கோப்பையிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் இவர் எடுத்த ஹாட்டிரிக் விக்கெட்டுகள் பார்த்து மொத்த கிரிக்கெட் உலகமே கதிகலங்கி போய் இருக்கிறது. இவர் சாஹலுடன் இணைந்து செய்யும் பவுலிங் டிரிக்குகள் தான் இப்போது கிரிக்கெட் உலகில் பேசு பொருள். இவர்களை அனைவரும் ஸ்பின் இரட்டையர்கள் என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.

 குல்தீப் யாதவ் பற்றி ரெய்னா

குல்தீப் யாதவ் பற்றி ரெய்னா

இந்த நிலையில் நேற்று குல்தீப் யாதவ் குறித்து இந்திய அணி வீரர் ரெய்னா பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அவரின் டி-20 போட்டிகள் குறித்து பேசிய ரெய்னா "எனக்கு குல்தீப் யாதவை ஐபிஎல் போட்டிகளில் இருந்து தெரியும். அவரை உருவாக்கியது அனில் கும்ப்ளே தான். குல்தீப் யாதவ் பேசும் போதெல்லாம் அனில் கும்ப்ளே பற்றித்தான் பேசுவார். குல்தீப் யாதவிற்கு இந்த பவுலிங் ஸ்டைலை கற்றுக் கொடுத்து அனில் கும்ப்ளே தான். மும்பை இந்தியன்ஸில் அவர் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டார். அவரின் வெற்றிக்கான சீக்ரெட் இதுதான்" என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Praising Kuldeep for his recent adventures in international cricket, Raina told to media that credit should be given to former head coach Anil Kumble. He states that, Anil was the one who shaped this young spinner.
Please Wait while comments are loading...