இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கோஹ்லி ஆதரவு பெற்ற ரவி சாஸ்திரி விண்ணப்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, ரவிசாஸ்திரி விண்ணப்பித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான அனில்கும்ப்ளே பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அந்த பதவிக்கு வீரேந்திர சேவாக், லால்சந்த் ராஜ்புத், தொட்ட கணேஷ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

Ravi Shastri has formally applied for the head coach of Indian men's cricket team

இந்திய அணி முன்னாள் மேலாளர் ரவி சாஸ்திரியும் இப்பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. அவர் தற்போது தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.

ரவி சாஸ்திரியை இப்பபதவிக்கு விண்ணப்பிக்க தூண்டுதலாக உள்ளது, பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க உள்ள மூவர் குழுவில் ஒருவரான சச்சின் டெண்டுல்கராகும். ரவி சாஸ்திரிக்கு கேப்டன் கோஹ்லி உட்பட பல வீரர்கள் ஆதரவு உள்ளது.

கும்ப்ளே போல உத்தரவு போடாமல், கோஹ்லியிடம் அடங்கி நடப்பார் என்று ரவி சாஸ்திரி பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. எனவே சச்சின், கங்குலி, லட்சுமணன் அடங்கிய கிரிக்கெட் அறிவுரை வழங்கும் மூவர் குழு, ரவி சாஸ்திரிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ravi Shastri has formally applied for the head coach of Indian men's cricket team, says BCCi sources.
Please Wait while comments are loading...