"இவர்தான்" இந்தியாவின் அடுத்த தலைமை கோச்... அடித்து சொல்கிறார் சுனில் கவாஸ்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் தலைமை பயிற்சியாளருக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் ரவி சாஸ்திரியே தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான தலைமை கோச்சாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். ஆரம்பம் முதலே கும்ப்ளேவுக்கும், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத்கோஹ்லிக்கும் இடையே முட்டல் மோதல் இருந்து வந்தது.

இதைத் தொடர்ந்து அவரது பதவிக் காலம் முடிவடைந்தாலும் அவர் மேற்கு இந்திய தீவுகளுடனான போட்டி வரை அப்பதவியில் நீடிப்பார் என்று கிரிக்கெட் வழிகாட்டு குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஐசிசி சாம்பியன் டிராபி

ஐசிசி சாம்பியன் டிராபி

கோஹ்லிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையே உள்ள மோதல் லண்டனில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கும்ப்ளே தாமாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்ய பிசிசிஐ முயற்சித்தும் பலனில்லை. இதனால் இந்தியாவின் தலைமை கோச் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

ஷேவாக் விண்ணப்பம்

ஷேவாக் விண்ணப்பம்

இந்திய முன்னணி வீரர் வீரேந்திர ஷேவாக், லால்சந்த் ராஜ்புட், தோடா கணேஷ், வெங்கடேஷ் பிரசாத், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, பாகிஸ்தான் முன்னாள் கோச் ரிச்சர்டு பைபஸ், மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் கோச் ஃபில் சைமன்ஸ் உள்ளிட்டோர் இந்தியாவின் தலைமை கோச் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அப்பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 9-ஆம் தேதி ஆகும். இதைத் தொடர்ந்து தலைமை கோச் பதவிக்கு கோஹ்லியின் ஆதரவாளரான ரவி சாஸ்திரியும் முறையாக விண்ணப்பித்துள்ளார்.

ஜூலை 10-இல் நேர்காணல்

ஜூலை 10-இல் நேர்காணல்

இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என்று கிரிக்கெட் வழிக்காட்டு குழுவின் உறுப்பினர் சௌரவ் கங்குலி தெரிவித்தார். தலைமை கோச் தேர்வு குறித்து சுனில் கவாஸ்கர் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

சாஸ்திரிக்கே வாய்ப்பு

சாஸ்திரிக்கே வாய்ப்பு

அப்போது அவர் கூறுகையில், தலைமை கோச் பணிக்கு பிசிசிஐயின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி முறையாக விண்ணப்பித்துள்ளார். தற்போது அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ள 7 பேரில் ரவி சாஸ்திரி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது என்றார் சுனில் கவாஸ்கர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hours after reports of Ravi Shastri formally applying as the head coach of Team India surfaced, former India captain Sunil Gavaskar feels Shastri is the top contendor for the coveted job.
Please Wait while comments are loading...