கிரிக்கெட்டிலும் மன்மோகன் சிங், சோனியா காந்தி... அவர்கள் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டால், அவர் இன்னொரு மன்மோகன் சிங்காக இருப்பார் என்று ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைைம பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதனிடையே இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இதையடுத்து கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகளுடனான தொடர் வரை அவருக்கு பதவி நீட்டிக்கப்பட்டது. எனினு்ம மோதல் உச்சத்தை எட்டியதில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐசிசி சாம்பியன் டிராபி இறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தவுடன் கும்ப்ளே தன் பணியிலிருந்து விலகிவிட்டார்.

தலைமை கோச் பணிக்கு...

தலைமை கோச் பணிக்கு...

இதைத் தொடர்ந்து பிசிசிஐ தலைமை கோச் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்றது. அதில் வீரேந்திர ஷேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், லால் சந்த் ராஜ்புட் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பிசிசிஐ-யின் முன்னாள் இயக்குநராக இருந்த ரவி சாஸ்திரி அப்பதவிக்கு கடந்த முறையே விண்ணப்பித்திருந்தார்.

தேர்வாக வில்லை

எனினும் அவரை கங்குலி உள்ளிட்ட கிரிக்கெட் வழிகாட்டுதல் குழுவினர் தேர்ந்தெடுக்காமல் கும்ப்ளேவை நியமித்தனர். தற்போது கும்ப்ளே விலகியதை தொடர்ந்து ரவி சாஸ்திரி அப்பதவிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று செய்திகள் வெளியாகின.

ரசிகர்கள் கருத்து

கிரிக்கெட் அணியின் தலைமை கோச்சாக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டால், அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போல் வாய்மூடி மௌனமாக இருப்பார் என்று ரசிகர்கள் ஒப்பிட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தன் பதவியை காத்து கொள்ள மௌனம் சாதித்து வந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் சில சீர்திருத்தங்களை செய்யவும் அவர் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

சாஸ்திரிக்கு மறுப்பு

கடந்த ஆண்டு தலைமை கோச் பணிக்கு ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என்பது கோஹ்லியின் விருப்பம் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால்தான் பிசிசிஐ, கும்ப்ளேவை ஆதரித்தது. எனவே மன்மோகன் சிங்கை போல் ரவி சாஸ்திரியும் எந்த சீர்திருத்தங்களையும் செய்யாமல் மௌனமாக இருப்பார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும் கோஹ்லி என்ற சோனியா காந்திக்கு ரவி சாஸ்திரி மன்மோகன் சிங்காக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After news of Shastri wanting to apply for the high-profile position became public, cricket fans compared him to former Prime Minister Manmohan Singh who was accused by detractors of remaining silent on key issues during his 10-year tenure as the country's leader.
Please Wait while comments are loading...