இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி? கோஹ்லி முழு ஆதரவு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியின் ஆதரவு பெற்ற ரவி சாஸ்திரியை புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மேற்கு இந்திய தீவுகளுடனான ஆட்டம் வரை அனில் கும்ப்ளே தொடரட்டும் என்பதால் அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

லண்டனில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டிக்காக இந்திய அணியினருடன் கும்ப்ளே சென்றார். அந்த போட்டிகள் முடிவடைந்து அணியினர் மேற்கு இந்திய தீவுகளுக்கு புறப்பட்டனர். அப்போது தமக்கு ஒரு முக்கியமான கூட்டம் உள்ளதால் பின்னர் வருவதாக கூறி லண்டனிலேயே இருந்தார் கும்ப்ளே.

 திடீர் ராஜினாமா

திடீர் ராஜினாமா

தாம் பயிற்சியாளராக நீடிப்பதை கோஹ்லி விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்து, யாரும் எதிர்பார்க்காத வேளையில் தனது பதவியை ராஜினாமா செய்தார் கும்ப்ளே. மேலும் தன்னுடைய பயிற்சி முறையில் கோஹ்லி சில கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை எனவும் கும்ப்ளே தெரிவித்திருந்தார். தலை சிறந்த பயிற்சியாளரை அகங்காரத்தால் கோஹ்லி இழந்துவிட்டார் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ-யின் முக்கிய அதிகாரியான ராஜீவ் சுக்லா கூறுகையில், கேப்டனுக்கும், கோச்சுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை களைய அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பிசிசிஐயின் பொறுப்பு செயலாளர், தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். நிர்வாக குழுவின் தலைவருடன் கிரிக்கெட் வாரியம் ஆணைய ஊறுப்பினர்கள் ஆலோசனை செய்தனர்.

 பலனளிக்கவில்லை

பலனளிக்கவில்லை

எனினும் எங்களது முயற்சிகள் பலனளிக்கவில்லை. கும்ப்ளேவும் ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். இலங்கை டூர் செல்வதற்கு முன்னர் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார். கும்ப்ளே கோச்சராக நீடிக்க கோஹ்லிதான் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுவது யூகங்களே.

 அவர்களும் மனிதர்கள்தானே

அவர்களும் மனிதர்கள்தானே

கோச்சரை விடுத்து கேப்டனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுவது தவறு. நாங்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் நடப்பது சகஜம்தான். அவர்களும் மனிதர்கள் தானே என்றார். புதிதாக நியமிக்கப்படும் இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளர் இங்கிலாந்தில் வரும் 2019-இல் நடைபெறும் உலக கோப்பை போட்டி வரை அப்பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.

 ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு

ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு

இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் பயிற்சியாளராக வருவதையே கோஹ்லியும் விரும்புவதால் பிரச்சினையேதும் இன்றி ரவி சாஸ்திரியையே நியமிக்க பிசிசிஐ முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ravi Shastri will ne the india's new head coach. Virat Kohli also wish to make him as coach. India will get his new head coach before tour to Sri Lanka?
Please Wait while comments are loading...