காளி உங்க கிட்ட.. பெல்ட் என் கிட்ட.. கோஹ்லி அன் கோவை கலாய்க்கும் ரோஹித்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்கள், மைதானத்தில் மட்டுமல்ல, டுவிட்டரிலும் புகுந்து விளையாடி வருகின்றனர். ஒருவருக்கு ஒருவர் பாராட்டு தெரிவிப்பது, கிண்டல் செய்வது என, புகுந்து விளையாடி வருகின்றனர்.

இந்திய வீரர்கள், இலங்கையில் விளையாடி வருகின்றனர். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றனர்.

Rohit Sharma teases Kholi and co

இடையில் கிடைத்த ஓய்வின்போது, உலக புகழ்பெற்ற, உலக மல்யுத்த வீரரான நமது நாட்டைச் சேர்ந்த, கிரேட் காளியை, நமது வீர்ர்கள் சந்தித்தனர். அவருடன் எடுத்துக் கொண்ட படத்தை, கேப்டன் விராத் கோஹ்லி, டுவிட்டரில் வெளியிட்டார். மற்ற சில வீரர்களும், அவருடன் எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டனர்.

காளியுடன் ஒப்பிடும்போது, தோற்றத்தில் நமது வீரர்கள், குட்டிக் குழந்தைகள் போல் உள்ளனர்.

இந்த படங்களை கிண்டல் செய்து ரோஹித் சர்மா வெளியிட்டுள்ள டுவிட், தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஐ.பி.எல். போட்டியில், மும்பை இந்தியன் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவுக்கு, உலக பொழுதுபோக்கு மல்யுத்த சாம்பியனான பால் மைக்கேல் லாவஸ்கி, தனது பெல்ட்டை வழங்கினார். டிரிபிள் எச் என்று அழைக்கப்படும், 14 முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற லாவஸ்கி, மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன் அணிக்கு, தனது பெல்ட்டை அளித்தார்.

தற்போது, அந்த பெல்ட்டுடன் தான் இருக்கும் படத்தை ரோஹித் வெளியிட்டுள்ளார்.

"நீங்கள் எல்லாம் கிரேட் காளியை சந்தித்தீர்கள். ஆனால், பெல்ட் என்னிடம் இருக்கிறது" என்று சக வீரர்களை வெறுப்பேற்றியுள்ளார் ரோஹித்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rohit Sharma has teased captain Kohli and other players who posed with Greak Kali.
Please Wait while comments are loading...