ஐசிசி சாம்பியன்ஸ்: இந்தியா- பாகிஸ்தான் இறுதி யுத்தத்தை முன்வைத்து ரூ.2000 கோடி வரை சூதாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறும் இறுதிப் போட்டியை முன்வைத்து ரூ.2000 கோடி வரை சூதாட்டம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான இறுதிப் போட்டி இன்று லண்டனில் நடைபெறுகிறது. இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லுமா? பாகிஸ்தான் முதல் முறையை கோப்பையை தட்டிச் செல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தியா- பாக் மோதல்

இந்தியா- பாக் மோதல்

பரமவைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் பைனலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன.

சூதாட்டம்

சூதாட்டம்

இந்தியா- பாகிஸ்தான் இறுதிப் போட்டியை முன்வைத்து சூதாட்ட தரகர்கள் காட்டில் அடைமழைதான். ஒருவர் இந்தியா வெற்றி பெறும் என்று ரூ.100 பெட் கட்டுகிறார்... அப்போது இந்தியா வெற்றி பெற்றால் ரூ.147 கிடைக்கும். ஒரு வேளை பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மற்றவருக்கு ரூ.300 கிடைக்கும்.

ரூ2000 கோடி சூதாட்டம்

ரூ2000 கோடி சூதாட்டம்

சூதாட்ட தரகர்கள் பாகிஸ்தான் மீது அதிக தொகை பெட் கட்டுவதால் இந்தியா வெற்றி பெறுவதற்கான தில்லுமுல்லுகளும், இந்தியா மீது அதிக தொகை பெட் கட்டினால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான மோசடிகளையும் பெட்டிங் மன்னர்கள் செய்வர். அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்திய- பாகிஸ்தான் போட்டியில் சுமார் ரூ.2,000 கோடி வரை சூதாட்டம் நடைபெறும் என்கிறது.

முழு கண்காணிப்பு

முழு கண்காணிப்பு

இதனால் இந்த பெட்டிங்கை தடுக்க கிரிக்கெட் வீர்ரகள் அனைவரும் முழு கண்காணிப்பில் உள்ளனர். ஒரு ஆண்டுக்கு சராசரியாக பெட்டிங்கில் மட்டும் ரூ.2 லட்சம் கோடி புழங்குகிறதாம். நாடு முழுவதும் பெட்டிங்கை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India and Pakistan will clash in final champion trophy cup, so the betting rates will be upto Rs. 2000 Crore.
Please Wait while comments are loading...