For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கையில் நடந்த தர்ம சங்கடமான சம்பவம் எது தெரியுமா?

By Veera Kumar

மும்பை: சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையில் நடந்த தர்ம சங்கடமான இக்கட்டான ஒரு சூழ்நிலை குறித்து நிகழ்ச்சியொன்றில் மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சச்சின் கூறியதாவது: தர்ம சங்கடமான சூழ்நிலை வாழ்க்கையில் பல நடந்துள்ளது. இருப்பினும் கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முதலில் நடந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையை பற்றி கூற விரும்புகிறேன்.

நான் சிறு வயதில் ரப்பர் பந்துகளை வைத்து பயிற்சி எடுத்து வந்தேன். ஒரு கோடை விடுமுறையின்போது கிரிக்கெட் பயிற்சிக்காக குடும்பத்தார் என்னை சேர்த்துவிட்டனர். அப்போது எனக்கு 11 வயது.

முதல் கிரிக்கெட்

முதல் கிரிக்கெட்

முதன் முதலில் அப்போதுதான், கிரிக்கெட் பந்தை எதிர்கொண்டேன். நான் ஆடுவதை பார்க்க எனது அப்பார்ட்மென்டிலுள்ள நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். கை தட்டி உற்சாகப்படுத்தினர். எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

கோல்டன் டக்

கோல்டன் டக்

ஆனால், நான் சந்தித்த முதல் பந்திலேயே பௌல்ட் ஆகி வெளியேறினேன். நான் வெளியே வந்தபோது எனது நண்பர்கள் எனக்கு கை தட்ட வேண்டுமா, ஆறுதல் சொல்ல வேண்டுமா என்று தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தனர். அது எனக்கு இன்னமும் ஞாபகம் உள்ளது.

சமாளித்தேன்

சமாளித்தேன்

எனக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய தருணம் அது. இருப்பினும், அந்த பந்து மிகவும் தாழ்வாக வந்ததால் பௌல்ட் ஆகிவிட்டதாகவும், எழுந்து வந்திருந்தால் சிறப்பாக ஆடியிருப்பேன் என்றும் நண்பர்களிடம் கூறி சமாளித்தேன்.

ஒரு பந்து தாக்குப்பிடிப்பு

ஒரு பந்து தாக்குப்பிடிப்பு

இதையடுத்து அடுத்த போட்டியில் கொஞ்சம் முன்னேறினேன். முதல் பந்தை தடுத்துக்கொண்டேன். ஆனால், கொடுமை என்னவென்றால், அடுத்த பந்தில் பௌல்ட் ஆகிவிட்டேன்.

சிங்கிள் ரன்னுக்கு கெத்து

சிங்கிள் ரன்னுக்கு கெத்து

அடுத்த போட்டியில் சிங்கிள் ரன் எடுத்து அதன்பிறகு அவுட் ஆனேன். ஆக மொத்தம் கிரிக்கெட் பந்தில் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் நான் எடுத்த மொத்த ரன் 1 மட்டுமே. ஆனால், காலரை தூக்கிவிட்டபடி, பார்த்தாயா, நான் 1 ரன் எடுத்துவிட்டேன் என்று கூறியபடி சமாளித்தேன்.

முடிப்பதுதான் முக்கியம்

முடிப்பதுதான் முக்கியம்

நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். வாழ்க்கையில் பயணத்தை எப்படி ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமில்லை. பயணத்தை எப்படி பூர்த்தி செய்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது (ரசிகர்கள் கைதட்டல்). இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி

இன்று சச்சின் உலகம் போற்றும் கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். ஆனால் அவரை டக்-அவுட் செய்த பவுலர்கள் என்ன ஆனார்கள் என்பதை உலகம் கவனிக்கவில்லை. தொடர்ந்து அவுட் ஆனபோது, நம்பிக்கையை இழந்து சச்சின் கிரிக்கெட்டே வேண்டாம் என்று நடையை கட்டியிருந்தால், இன்று உலக கிரிக்கெட்டுக்கு ஒரு நாயகன் கிடைக்காமல் போயிருக்க கூடும்.

Story first published: Tuesday, May 31, 2016, 11:14 [IST]
Other articles published on May 31, 2016
English summary
India follows cricket as religion and Sachin Tendulkar as the God of cricket. You might think you everything about your god, but today we bring u something we bet u don't. Sachin also had faced embarrassment at some point in his life. Here's the legend himself confessing his most embarrassing moment. Click to watch the video.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X