சச்சின் ஹெல்மட்டை மாட்டினால் போதுமா.. பவுலிங்கில் பட்டையைக் கிளப்ப வேண்டாமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்திய அணியினரின் டிரஸிங் ரூமில் சச்சின் டெண்டுல்கரின் ஹெல்மட் மாட்டப்பட்டுள்ளது. சச்சின் ஹெல்மட்டை மாட்டினால் மட்டும் போதுமா பந்துவீச்சில் பாகிஸ்தானை பதம் பார்க்க வேண்டாமா?

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பெருத்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுமா என இந்திய ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

ஆனால் அதனை கொஞ்சமும் யோசிக்காமல் படு அலட்சியமாக ரன் அவுட்டுகளை நழுவவிட்டனர் இந்திய வீரர்கள். பும்ராவின் நோபாலில் கிடைத்த வாழ்க்கையாக மிக ஜாக்கிரதையாக கையாண்டு வருகிறார் பாகிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஃபக்கர் ஸமாம்.

பந்து வீச்சை பதம்பார்த்த ஃபக்கர்

பந்து வீச்சை பதம்பார்த்த ஃபக்கர்

இந்திய பந்து வீச்சை பதம்பார்த்தார். முதல் முறையாக சதமடித்து சாதனை படைத்த அவர், 114 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

டிரஸிங் ரூமில் சச்சின் ஹெல்மட்

இந்நிலையில் இந்திய அணியினரின் டிரஸிங் ரூம் சுவரில் சச்சின் டெண்டுல்கரின் ஹெல்மட் மாட்டப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் ஆட்டோகிராப்பும் அங்கு போடப்பட்டுள்ளது.

25 டெஸ்ட், 73 ஒருநாள் போட்டிகள்

25 டெஸ்ட், 73 ஒருநாள் போட்டிகள்

சச்சின் டெண்டுல்கர், இந்தியா 1996-2000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 25 டெஸ்ட் மேட்ச், 73 ஒருநாள் போட்டிகள் என்றும் அங்கு எழுதப்பட்டுள்ளது.

போட்டோவை வெளியிட்ட பிசிசிஐ

போட்டோவை வெளியிட்ட பிசிசிஐ

இந்த போட்டோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் அணியில் இல்லாவிட்டாலும் அவரது ஹெல்மட் இந்திய அணிக்கு உத்வேகத்தை அளித்து ஊக்கப்படுத்துவதற்காக மாட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sachin Tendulkar's Helmet In Team India Dressing Room Inspires Players.The image tweeted out by Board of Control for Cricket in India (BCCI) shows Tendulkar's helmet hanging on the wall, with his stats bracketing his autograph.
Please Wait while comments are loading...