For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லியின் வெற்றிக்கு காரணம் யார் தெரியுமா?

By Staff

புதுடில்லி: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்றதுடன், ஒருதினப் போட்டித் தொடரில், 2-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகின் நம்பர் 1 வீரராக கேப்டன் விராட் கோஹ்லி உருவானதற்கு முக்கிய காரணம் யார் தெரியுமா?

இந்த செய்தியைப் படித்தவுடன் உங்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படலாம், அல்லது விழுந்து விழுந்து சிரித்து வயிற்றி வலி ஏற்பட்டால், கம்பெனி பொறுப்பல்ல. இந்த எச்சரிக்கையுடன், இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள்.

secret of Kohli


இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடத் துவங்கிய, இளம் வயதில், பேட்டிங்களில் முதலில் அபாரமாக துவக்கினாலும், நடுவில் திடீரென மிகப் பெரிய சறுக்கலை கோஹ்லி சந்தித்து வந்தார். தனது பேட்டிங்களை வீடியோவில் பார்த்த பிறகும், தவறு எங்கு என்பது அவருக்கு புரியவில்லை. இந்திய கிரிக்கெட் அணி கோச்களாக இருந்தவர்களுக்கும், அணியின் மூத்த வீரர்களுக்கும் கூட, கோஹ்லி எங்கு தவறு செய்கிறார் என்பது புரியவில்லை.

இந்த நேரத்தில் தான், கோஹ்லிக்கு மிகப் பெரிய ஞானஉபதேசத்தை ஒருவர் அளித்துள்ளார். அதன்படி நடந்ததால்தான், தற்போது, உலகின் நம்பர் 1 வீரராக, அதிரடி வீரராக கோஹ்லி மாறியுள்ளார்.

அந்த ஞான உபதேசத்தை அளித்தவர் யார் தெரியுமா?

பாலியல் பலாத்கார புகாரில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீது ராம் ரஹீம் சிங்தான்.

கில்லி, பாண்டி, சடுகுடு போன்றவற்றைத் தவிர, 32 வகையான விளையாட்டுகளில் கில்லாடியான(?!) ராம் ரஹீமை, ஒருமுறை, கோஹ்லியும், ஆஷிஷ் நெஹ்ராவும் சந்தித்துள்ளனர்.

அப்போதுதான், கோஹ்லி செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி, எப்படி விளையாட வேண்டும் என்று ராம் ரஹீம் உபதேசம் செய்துள்ளார். இதற்கான வீடியோ தற்போது மீண்டும் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இந்த ரகசியத்தை, ராம் ரஹீம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தான், தற்போது பரபரப்பாக பரவி வருகிறது.

“நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள். ஆனால், 30, 40 ரன்கள் எடுத்தவுடன், ஏதோ ஒரு பதற்றத்தில் தவறு செய்கிறீர்கள். நான் சொல்வது மாதிரி செய்யுங்கள், இனி எல்லாமே ஜெயம்தான்" என்று, கோஹ்லியிடம் கூறியதாக ராம் ரஹீம் அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

அவர் கூறிய ரகசியம், போட்டியில் மைதானத்தில் இறங்குவதற்கு முன்பாக, அன்றைய தினம் எப்படி விளையாட வேண்டும் என்று பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

ராம் ரஹீமின் ஆலோசனைகளில் நமக்கு விராட் கோஹ்லி மட்டும் கிடைக்கவில்லை. கிரிக்கெட் வீர்ரகள் ஷிகார் தவான், யூசுப் பதான், ஆஷிஷ் நெஹ்ரா, ஜாகிர் கான், அமித் மிஸ்ரா, குத்துச்சண்டை வீரர் விஜயேந்திர சிங் ஆகியோரும் இவரிடம் ஆசி பெற்ற பிறகே, பிரபலமானதாக, நாங்கள் சொல்லவில்லை, ராம் ரஹீமே சொல்லியுள்ளார்.

Story first published: Saturday, August 26, 2017, 17:35 [IST]
Other articles published on Aug 26, 2017
English summary
Dera Sacha Chief claimed to have trained Virat Kohli and others
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X