For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சரி.. பழைய கதை ஒன்றை பார்ப்போமா?

By Lakshmi Priya

சென்னை: அனில் கும்ப்ளே.. விராத் கோஹ்லி சண்டை கிடக்கட்டும். பழைய கதை ஒன்றைப் பார்ப்போமா. இதுவும் ஒரு கோச்சின் கதைதான்.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர் டங்கன் பிளட்சர். இவரது காலத்தில் இந்தியா படு மோசமாக ஆடி வந்தது. பல முக்கியத் தோல்விகளைச் சந்தித்தது.

அப்போது அணியின் இயக்குநராக இருந்தார் ரவி சாஸ்திரி. பிளட்சை டம்மியாக்கியது கிரிக்கெட் வாரியம். பின்னர் பிளட்சர் போன பின்னர் சாஸ்திரியே இயக்குநராகவும், பயிற்சியாளர் பொறுப்பிலும் நீடித்தார்.

பழைய பிரச்சினை

பழைய பிரச்சினை

டோணி தலைமையில் இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தது. அதில் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. கோஹ்லி சரியாக ஆடவில்லை. விமர்சனத்துக்குள்ளானார்.

அனுஷ்காவுடன்

அனுஷ்காவுடன்

இங்கிலாந்து டூரின்போது சரியாக விளையாடாமல் அனுஷ்காவுடன் ஷாப்பிங் போக வர இருந்ததும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் டோணிக்குமே கூட கோஹ்லி மீது அதிருப்திதான். ஆனால் ரவி சாஸ்திரி அதை பெரிதுபடுத்தவில்லை.

சாஸ்திரியின் ஆதரவு

சாஸ்திரியின் ஆதரவு

கோஹ்லிக்கு ஆதரவாகவே இருந்தார் சாஸ்திரி. கோஹ்லி சீக்கிரம் பார்முக்குத் திரும்புவார் என்று மட்டுமே கூறினார். இந்த நிலையில்தான் பயிற்சியாளர் பதவிக்கு சாஸ்திரி விண்ணப்பித்தார். அவருடன் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரும் விண்ணப்பித்திருந்தனர்.

கங்குலியின் ஆதரவு

கங்குலியின் ஆதரவு

கிரிக்கெட் அறிவுரை வழிக்காட்டு குழுவில் இருந்த கங்குலி, ரவி சாஸ்திரியின் ஆட்டிடியூட் பிடிக்காமல் கும்ப்ளே பக்கம் தனது ஆதரவைக் காண்பித்தார். சச்சின், லட்சுமணும் அதை ஆமோதிக்க, சாஸ்திரி நிராகரிக்கப்பட்டார், கும்ப்ளே தேர்வானார்.

மீண்டும் திரும்புமா கெமிஸ்ட்ரி?

மீண்டும் திரும்புமா கெமிஸ்ட்ரி?

இங்கிலாந்து தொடரில் கோஹ்லி சொதப்பியபோது அவருக்கு ஆதரவாக இருந்தவர் சாஸ்திரி. வருங்கால கேப்டன் என்ற வகையில் கோஹ்லிக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார் என கருதலாம். இந்த நிலையில் தற்போதைய சூழலில் சாஸ்திரிக்கு கோஹ்லி ஆதரவு தெரிவித்தால், சாஸ்திரி பயிற்சியாளராக வாய்ப்புகள் அதிகம்.

Story first published: Thursday, June 22, 2017, 13:29 [IST]
Other articles published on Jun 22, 2017
English summary
Before kumble- kohli clash, there was an another story about the coacher Duncan Fletcher.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X