புனே-மும்பை போட்டி நேரத்தில் தியேட்டருக்கு கூப்பிட்ட மனைவி... சேவாக் செய்த தில்லாலங்கடி வேலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மனைவியோடு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், செல்போனில் கிரிக்கெட் போட்டியை நேரலையில் பார்த்தபடி இருந்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று ஐபிஎல் குவாலிபையர்-1 போட்டி நடைபெற்றது. மும்பை மற்றும் புனே அணிகள் மோதின. இதை பார்க்க சேவாக் ஆர்வமாக இருந்தார்.

ஆனால் சேவாக் மனைவியும் சராசரி ஆசைகள் கொண்டவர்தானே. தியேட்டருக்கு படம் பார்க்க கூப்பிட்டுட்டு போங்களேன் என கூற, மனைவி பேச்சை தட்ட முடியாத சேவாக் தியேட்டருக்கு கிளம்பிவிட்டார்.

பிஸியாக இருந்தார்

பிஸியாக இருந்தார்

பஞ்சாப் அணி ஆலோசகராக செயல்பட்ட சேவாக், ஐபிஎல் தொடர் ஆறம்பித்தது முதல் பிஸியாக இருந்தார். பஞ்சாப் அணி, பிளேஆப் ரவுண்டுக்கு போக முடியவில்லை என்பதால், சேவாக் இப்போது ஃப்ரீதான்.

செல்போனில் பார்த்தார்

செல்போனில் பார்த்தார்

மனைவியோடு தியேட்டருக்கு போனாலும், புனே-மும்பை போட்டியை செல்போன் ஆப் மூலம், நேரலையில் ரசித்துள்ளார் சேவாக். மனைவிக்கு கம்பெனி கொடுத்த மாதிரியும் ஆச்சு, போட்டியை ரசித்த மாதிரியும் ஆச்சு என்பது இந்த அதிரடி வீரரின் கணக்கு.

டிவிட்டரில் ஷேர்

செல்போனில் கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டிருந்ததை போட்டோவாக எடுத்து டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் சேவாக். மகிழ்ச்சியான மனைவி எனில், மகிழ்ச்சியான வாழ்க்கை என போட்டோவுக்கு உரையும் எழுதியுள்ளார் சேவாக்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

நேற்றைய போட்டியில் டோணியின் அபார அதிரடியாலும், வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்து வீச்சாலும், புனே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Indian cricketer Virender Sehwag posted a photograph on Twitter of himself at a movie theatre watching IPL match between RPS and MI on his phone.
Please Wait while comments are loading...