இன்னும் 2 வருடம் பதவிகாலம் இருக்கிறது.. ஐசிசி தலைவர் ஷசாங் மனோகர் திடீர் ராஜினாமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், ஐசிசி தலைவர் பதவியை இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார்.

Shashank Manohar steps down as ICC chairman

தனிப்பட்ட காரணங்களுக்காக ஷசாங் மனோகர் ராஜினாமா செய்வதாகவும், அடுத்த தலைவர் நியமிக்கும் வரை தலைமைச் செயல் அதிகாரி கூடுதலாக தலைவர் பொறுப்பை கவனிப்பார் என சர்வதேச கிரிக்கெட் சங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாதங்கள் மட்டுமே இப்பதவியில் அவர் நீடித்துள்ளார். 59 வயதாகும் மனோகர், தனது ராஜினாமா குறித்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி தேவ் ரிச்சர்ட்சனுக்கு இமெயில் மூலம் தகவல் கொடுத்துள்ளார். மனோகரின் பதவிக் காலம் இன்னும் 2 வருட காலத்திற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In a surprise development, Shashank Manohar today resigned as ICC chairman after merely eight months in office citing personal reasons.
Please Wait while comments are loading...