இலங்கைக்கு எதிராக நாளை முதல் டெஸ்ட்.. தவானுடன் ஓப்பனிங்கில் இறங்கப்போவது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷிகர் தவானுக்கு ஜோடியாக ஓப்பனிங்கில் களமிறங்க பேட்ஸ்மேனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக ஓப்பனிங்கில் களமிறங்கும் முரளி விஜய் காயத்தால் தொடரிலிருந்தது விலகியுள்ளார். ராகுல் காய்ச்சல் காரணமாக, முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. எனவே ஷிகர் தவானுடன் ஜோடியாக களமிறங்கப் போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

அநேகமாக தவானுடன் ஜோடியாக அபினவ் முகுந்த் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவானும், முகுந்தும் சேர்ந்து வலை பயிற்சியில் ஈடுபட்டததை பத்திரிகையாளர்களால் பார்க்க முடிந்தது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், தவான் மற்றும் முகுந்த் இருவரும் நெருக்கடியான சூழ்நிலையை உணரக் கூடாது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இனிதான் ஆரம்பம்

இனிதான் ஆரம்பம்

இலங்கை தலைவர் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் தவான் 40 ரன்கள் எடுத்தார். முகுந்த் பெரிதாக சாதிக்கவில்லை அப்போட்டியில். தவான் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் அவ்வப்போது இடம்பிடித்துவருகிறார். 23 டெஸ்ட் போட்டிகளில் அவர்ர ஆடியுள்ளார். 4 சதங்கள் விளாசியுள்ளார். கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில ஆடியுள்ளார்.

அனுபவம்

அனுபவம்

முகுந்த் 6 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்றுள்ளார். அதேநேரம், உள்நாட்டு டெஸ்ட் தொடர்கள் பலவற்றில் ஆடிய அனுபவம் உள்ளவர். பெங்களூரில் கடந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முகுந்த் ஆடி 16 ரன்கள் எடுத்தார்.

India vs West Indies, Hardik Pandya’s "fearless" cricket-Oneindia Tamil
பெரும் தொடர்

பெரும் தொடர்

இலங்கையில் நடைபெறும் அந்த அணிக்கு எதிரான தொடரில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட்டுகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் ஆட உள்ளது. டெஸ்ட் போட்டியோடு நாளை தொடங்கும் இந்த நெடுந்தொடர், செப்டம்பர் மாத இறுதியில்தான் நிறைவடையும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
It is most likely that Dhawan and Abhinav Mukund will be shouldering the opening responsibilities for India at Galle and neither is leaving anything up to chance.
Please Wait while comments are loading...