ஷிகர் தவான்.. செம்ம ஸ்பீட்.. எதுல தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐசிசி போட்டிகளில் அதி வேகமாக 1000 ரன்கள் எடுத்த வீரராக ஷிகர் தவான் உருவெடுத்துள்ளார். 16 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இந்த விஷயத்தில் சச்சின் டெண்டுல்கரையே அவர் தூக்கிச் சாப்பிட்டுள்ளார். சச்சினுக்கு 18 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய வீரர்களில் ஷிகர் தவான் அசத்திக் கொண்டிருக்கிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியின்போதுதான் அவருக்கு இந்த புதிய பெருமை கிடைத்தது.

சச்சின் சாதனை முறியடிப்பு

சச்சின் சாதனை முறியடிப்பு

ஐசிசி போட்டிகளில் ஷிகர் தவான் 16 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு இதற்கு 18 போட்டிகள் தேவைப்பட்டன

கங்குலிக்கு 20

கங்குலிக்கு 20

அதேசமயம், கங்குலிக்கு 20 இன்னிங்ஸ்கள் இதற்குத் தேவைப்பட்டுள்ளது. அவர்களையெல்லாம் பீட் செய்துள்ளார் ஷிகர் தவான். வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவர் ஷிகர் தவான் என்பது குறிப்பிடத்தக்கது.

19வது அரை சதம்

19வது அரை சதம்

நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் தனது 19வது ஒரு நாள் அரை சதத்தைப் போட்டதோடு, இந்தியாவின் வெற்றிக்கும் உதவியாக இருந்தார். ஐசிசி சாம்பியன்ஸ் போட்டிகளில் இது அவருக்கு 4வது அரை சதமாகும். அதிலும் இந்தத் தொடரில் அவர் தொடர்ச்சியாக போட்ட 3வது அரை சதமாகும்.

கோஹ்லியுடன் அசத்தல்

கோஹ்லியுடன் அசத்தல்

நேற்றைய போட்டியில் இவரும், கேப்டன் விராத் கோஹ்லியும் இணைந்து அசத்தலாக ஆடி இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். கோஹ்லியும் அரை சதம் போட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian opener Shikhar Dhawan has emerged as the fastest player to Score 1000 Runs in ICC tournaments. He has taken 16 innings to get this number.
Please Wait while comments are loading...