டிவில்லியர்ஸ் பழைய ஃபார்முக்கு வர இதை மட்டும் செய்ய வேண்டும்.. ஸ்மித் ஐடியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: டிவில்லியர்ஸ் பழையபடி பேட்டிங்கில் சாதிக்க கேப்டன்ஷிப்பை விட வேண்டும் என்று, முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் அறிவுறுத்தியுள்ளார்.

ஹசிம் ஆம்லா டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை துறந்தபிறகு, 2016ல் டிவில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த டிசம்பரில் டிவில்லியர்ஸ் இந்த பொறுப்பை விட்டு வெளியேவந்தார். பாப்டுப்ளசிஸ் கேப்டனாக்கப்பட்டார்.

சமீபகாலமாக டிவில்லியர்ஸ் பேட்டிங் சொதப்பிக்கொண்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா சொதப்பல்

தென் ஆப்பிரிக்கா சொதப்பல்

சர்வதேச பவுலர்களை அச்சுறுத்தும் அவரது பேட்டிங் வீக்காக இருப்பதால் தென் ஆப்பிரிக்கா பல முக்கிய போட்டிகளில் தோற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு கூட தென் ஆப்பிரிக்கா தகுதி பெறவில்லை.

தேர்ந்தெடுத்து ஆட்டம்

தேர்ந்தெடுத்து ஆட்டம்

டிவில்லியர்ஸ் தனக்கு விருப்பமான போட்டிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து ஆடுகிறார் என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை அவர் புறக்கணித்தது இதற்கு உதாரணமாக கூறப்படுகிறது.

கட்டுரை

கட்டுரை

இதுகுறித்து இங்கிலாந்து பத்திரிகையொன்றில் கட்டுரை எழுதியுள்ள ஸ்மித் கூறுகையில், டிவில்லியர்ஸ் தனது பேட்டிங் திறமையை யாருக்கும் நிரூபித்துக் காட்ட தேவையில்லை. விமர்சனம் செய்வோர் சும்மா இருந்தால் போதும்.

உலக கோப்பை

உலக கோப்பை

டிவில்லியர்ஸ் பழையபடி பேட்டிங்கில் கலக்க வேண்டுமானால், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் முழுமையாக அவர் விலக வேண்டும். அப்படி செய்தால், அடுத்த உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்கா சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former South Africa skipper Graeme Smith has advised a struggling AB De Villiers to focus on limited overs cricket and give up the One-day International (ODI) captaincy to fully concentrate on his batting.
Please Wait while comments are loading...