For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி இடத்தை நிரப்ப ஆள் வந்தாச்சு... கங்குலி!

By Veera Kumar

கொல்கத்தா: ஹர்திக் பாண்டியா டோணி இடத்தை பிடித்துவிடும் வாய்ப்புள்ளதாக இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள், 3 டி20 தொடர்களில் பங்கேற்றது. ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. ஆனால் டி20 தொடர் 1-1 என்ற நிலையில் இருந்தபோது, ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறவிருந்த 3வது டி20 போட்டி பிட்ச் தயாராகாததால் சமனில் முடிந்தது.

இத்தொடரில் கேப்டன் கோஹ்லி பெரிய அளவில் ரன் குவி்கவில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா, ரஹானே ஆகியோர் ரன் குவித்தனர்.

 இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

இதுகுறித்து கங்குலி கூறியதாவது: ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரின் போது ஒரு சில விஷயங்களை தவிர, இந்திய அணி ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தியது. ஹர்திக் பாண்டியாவின் திறமை இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.

 நடுங்க வைக்கும் சிக்சர்

நடுங்க வைக்கும் சிக்சர்

பாண்ட்யா பந்தை சிக்சருக்கும் அனுப்பும் விதம், எதிரிகளை நடுங்கச் செய்கிறது. இதே ஆட்டத்தை பாண்ட்யா தொடர்ந்தால், விரைவில் டோணி இடத்தை பாண்டியா பிடித்துவிடுவார்.

 துவக்க வீரர் ரஹானே

துவக்க வீரர் ரஹானே

ரஹானே தொடர்ந்து சிறப்பான துவக்கம் அளித்துவருகிறார். இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக இப்படியே செயல்படுவது மிகவும் முக்கியம். இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

பினிஷர்

பினிஷர்

ஹர்திக் பாண்டியாவின் சிக்சர் அடிக்கும் ஸ்டைல், மேற்கு இந்திய தீவுகள் வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக, பிரபல வீரர்கள் தெரிவிக்கிறார்கள். பல போட்டிகளில் சிறந்த பினிஷராக அவர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 16, 2017, 18:27 [IST]
Other articles published on Oct 16, 2017
English summary
The former Indian skipper Sourav Ganguly has lavished praises on the latest sensation of Indian cricket Hardik Pandya.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X