கோஹ்லிக்கு செக்.. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை டம்மியாக்கிய கங்குலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை கிரிக்கெட் ஆலோசனை குழு தேர்ந்தெடுத்துள்ளது. இது அக்குழு உறுப்பினர் கங்ககுலி விருப்பத்திற்கு மாறானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரவி சாஸ்திரியைவிட சேவாக்தான் பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர் என்பது கங்குலி கருத்தாம். ஆனால் அணியினரின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து ரவி சாஸ்திரியை நியமிக்க கங்குலியிடம் சக குழு உறுப்பினர் சச்சின்தான் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சச்சின் கூறியதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் கங்குலியும் அதற்கு சம்மதித்தார். எனவேதான் நேற்று முன்தினம் தொடங்கிய இழுபறி நேற்று இரவு வரை நீடித்து ஒருவழியாக சாஸ்திரி பெயர் இறுதி செய்யப்பட்டது.

இரு பயிற்சியாளர்கள்

இரு பயிற்சியாளர்கள்

அதேநேரம், கங்குலி சில விஷயங்களில் உறுதியாக இருந்தார். அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானையும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் பேட்டிங் ஆலோசகராக டிராவிட்டும் செயல்பட வேண்டும் என்பதில் கங்குலி உறுதியாக இருந்தார். சாஸ்திரியால் அணிக்கு நல்ல பயிற்சி வழங்க முடியாது என்பதே கங்குலி எண்ணம்.

கங்குலி விருப்பம்

ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்தபோதிலும், கங்குலி விருப்பப்படி, பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். இந்திய அணி வெளிநாட்டு பயணங்களில்தான் பேட்டிங்கில் சொதப்பும். எனவே அப்போதுதான் பயிற்சியாளர் பங்களிப்பு அதிகம் தேவை. அந்த இடத்தை டிராவிட்டை வைத்து பூர்த்தி செய்துள்ளார் கங்குலி.

செக் வைத்த கங்குலி

ஜாகீர்கானும், டிராவிட்டும், கங்குலி கேப்டனாக இருந்தபோது அணியில் ஆடியவர்கள். கங்குலியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். எனவே கோஹ்லி அன்டு கோவிடம் இந்திய அணி முழுமையாக சென்றுவிடாமல் இருக்க பேட்டிங், பவுலிங்கில் தனக்கு வேண்டியவர்களை நியமிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார் கங்குலி.

சாஸ்திரி டம்மி

சாஸ்திரி டம்மி

38 வயதாகும் ஜாகீர்கான் 92 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் போட்டிகளில் ஆடி 282 விக்கெட்டுகளையும் வீழ்த்திய, இந்தியா கண்ட மிகச்சில சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகும். இப்படி அனைத்து இடங்களிலும் சாஸ்திரிக்கு செக் வைத்துள்ள கங்குலி, அவரை மீண்டும் இந்திய அணியின் இயக்குநராக மட்டுமே பார்ப்பது உறுதியாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ravi Shastri was appointed as the head coach of the Indian cricket by CAC, but one of its member Sourav Ganguly was strongly against appointing him. It was only after Master blaster Sachin Tendulkar persuaded him, who wanted Ganguly to respect the team's decision Ganguly gave his approval on the name of Ganguly.
Please Wait while comments are loading...