நாமதான் வருத்தப்படுறோம், இந்திய வீரர்கள் என்ன பண்ணாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். உத்தர பிரதேசத்தில், சில ரசிகர்கள் டிவிகளை போட்டு உடைத்துள்ளனர்.

டீக்கடைகளிலும், மக்கள் சந்திக்கும் இடங்களிலும், "இப்படியாகிப்போச்சே.." என விம்மியபடி விசாரித்துக்கொள்கிறார்கள். இந்த நிலையில், இந்திய வீரர்கள் எதுவுமே நடக்காததை போல சகஜமாக இருந்தனர்.

மறுபக்கம் பாகிஸ்தான் டிரெஸ்சிங் ரூமில், காணாததை கண்டதை போல கொண்டாட்டம் அலைமோதுகிறது.

கூத்துக்கள்

பாகிஸ்தான் டிரெஸ்சிங் அறையில் நடந்த கூத்துக்களை ஐசிசி டிவிட் செய்துள்ளது, அதை பாருங்கள். தாங்க முடியலைல்ல.

வெற்றி யாத்திரை

ஐசிசி இன்னொரு டிவிட்டில், பாகிஸ்தான் நடத்திய வெற்றி யாத்திரையை வீடியோவாக வெளியிட்டுள்ளது.

நடனம்

வெற்றி பெற்ற தருணத்தில் பாகிஸ்தான் அணி நடத்திய ஜிம்பாலே, ஜிம்பாலே வகை டான்ஸ் இது.

சிரிப்போ சிரிப்பு

ஆனால் போட்டி முடிந்த பிறகு, கோபக்கார கோஹ்லி உட்பட இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் சகஜமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். விளையாட்டு என்பது இப்படி விரோதம் இல்லாமல்தான் இருக்க வேண்டும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There were amazing celebrations in the Pakistan changing room after their CT17 win!
Please Wait while comments are loading...