சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் இந்திய அணியில் ஆடிக்கொண்டுள்ளார்கள்.. ஸ்ரீசாந்த் பகீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்திய அணியில் ஆடிக்கொண்டுள்ளார்கள்-ஸ்ரீசாந்த் பகீர்- வீடியோ

கொச்சி: 2013ல் நடந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே, ராஜஸ்தான் அணி குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக 2017 வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.

இதே சூதாட்ட குற்றச்சாட்டில் கேரளவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடை பெற்றார். சில நாட்களுக்கு முன் அவர் மீதான தடை உறுதி செய்யப்பட்டு அவர் மீண்டும் அணியில் இணைய இருந்த வாய்ப்பு முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ''சூதாட்டம் சம்பந்தமாக என்னை தடை செய்த பிசிசிஐ, இந்திய அணியில் இருக்கும் இன்னும் சிலரையும் தடை செய்ய வேண்டும்'' என வித்தியாசமான சில தகவல்களை கூறி ஸ்ரீசாந்த் பகிர் பேட்டி அளித்து இருக்கிறார்.

 சூதாட்டத்தில் சிக்கிய ஐபிஎல்

சூதாட்டத்தில் சிக்கிய ஐபிஎல்

2013ல் நடந்த ஐபிஎல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது. அதே தொடரில் விளையாடிய ராஜஸ்தானை ராயல்ஸ் அணிக்கும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஐபிஎல் வரை இரண்டு அணிகளும் ஐபிஎல் விளையாட முடியாமல் போனது. இதையடுத்து தற்போது இரண்டு அணிகளும் 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கூறப்பட்டது. மேலும் அந்த அணியில் முன்பு விளையாடிய வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவார்க்ள என்று கூறப்பட்டு உள்ளது.

 ஸ்ரீசாந்துக்கும் தடை

ஸ்ரீசாந்துக்கும் தடை

இந்த நிலையில் 2013ல் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விசாரிக்கப்பட்டார். இவருடன் நிறைய பேர் விசாரிக்கப்பட்டாலும் கடைசியில் இவர் , அங்கித் சவாண் போன்ற சிலர் மட்டும் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடை பெற்றனர். அதன்படி அவர் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து வாழ்நாள் தடை பெற்றார்.

 மேல் முறையீடு

மேல் முறையீடு

இந்த நிலையில் கிரிக்கெட்டை விட்டு விலகிய ஸ்ரீசாந்த் மலையாள படங்கள் சிலவற்றில் நடிக்க தொடங்கினார். அதன்பின் மொத்தமாக கிரிக்கெட் உலகைவிட்டு விலகி இருந்தார். ஆனால் சில நாட்களுக்கு பின் கேரள உயர்நிதி மன்றத்தில் பிசிசிஐ விதித்த தடைக்கு எதிராக வழக்கு தொடுத்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த இந்த தீர்ப்பில் பிசிசிஐ எடுத்த முடிவில் தலையிட முடியாது. தடை எப்போதும் போல தொடரும் என்று கூறப்பட்டது. இதையடுத்து கோவம் அடைந்த ஸ்ரீசாந்த் அந்த தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார்.

 இந்திய அணியிலும் இருக்கிறார்கள்

இந்திய அணியிலும் இருக்கிறார்கள்

இந்த நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பேசிய ஸ்ரீசாந்த் தற்போது புதிய தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். அதில் "என்னை மட்டும் சூதாட்ட புகாரில் கைது செய்து தடை விதித்து இருக்கிறார்கள். ஆனால் என்னுடன் புகார் பட்டியலில் இருந்த பலர் இப்போது சுதந்திரமாக இருக்கிறார்கள். சிஎஸ்கே அணியில் கூட பலர் இந்த குற்றத்தில் ஈடுபட்டார்கள். அதில் சிலர் தற்போது இந்திய அணியில் கூட விளையாடுகிறார்கள்'' என்று கூறியிருக்கிறார். இவரது இந்த கருத்து ஐபிஎல் பிரச்சனையில் மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Indian cricketer Sreesanth speaks about what his IPL probe. He also added that CSK and many Indian players has done lot of unethical things in IPL 2013.
Please Wait while comments are loading...