இந்தியா வரும் இலங்கை அணி அறிவிப்பு... ஓபனருக்கு கல்தா!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இ்ந்தியாவுக்கு வரும் இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் விளையாட உள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில், ஓபனர் கௌஷால் சில்வா, முதல்நிலை பேட்ஸ்மேன் குஷால் மெண்டிஸ் ஆகியோர் இடம் பெறவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டித் தொடர்களில் பங்கேற்றது. ஒன்பது போட்டிகளிலும் இந்திய அணி வென்றது.

Srilanka announces team

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் முடியவுள்ளது. அதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறது. தலா மூன்று டெஸ்ட் போட்டிகள், ஒருதினப் போட்டிகள், டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் நடக்க உள்ளன.

முதல் டெஸ்ட் போட்டி, கோல்கத்தாவின் ஈடன் கார்டனில், நவம்பர் 16ல் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து நாக்பூரில் நவம்பர் 24ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும், டில்லியில் டிசம்பர் 2ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடக்க உள்ளது.

இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் தோல்வியடைந்தாலும், அதன்பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு ஆட்டங்களிலும் வென்று இலங்கை தொடரை வென்றது. அந்த தெம்புடன் இந்தியா வர உள்ளது.

நீண்ட வெளிக்குப் பிறகு, பாகிஸ்தான் தொடரில் சேர்க்கப்பட்ட ஓபனர் கௌஷால் சில்வா, நான்கு இன்னிங்சில் 67 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சம், 27 ரன்கள் எடுத்தார். அதனால் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

முதல்நிலை பேட்ஸ்மேனான குஷால் மென்டிஸ், இந்தியாவுக்கு எதிராக சதமடித்தார். அதன்பிறகு, 13 இன்னிங்சில் அரைசதம் கூட தாண்டவில்லை. அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரில் பாதியில் திருப்பி அனுப்பப்பட்டார். தற்போது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் சேர்க்கப்படவில்லை.

காயம் காரணமாக விளையாடாமல் இருந்த முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் அணிக்கு மீண்டும் திரும்புகிறார். வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆல்-ரவுண்டர் தாசன் ஷனாகா இடம்பெற்றுள்ளார்.

அணிகள் விவரம்

இலங்கை:

தினேஷ் சண்டிமால் (கேப்டன்), திமுத் குணரத்னே, தனஞ்சய டிசில்வா, சதீரா சமாரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், லாகிரு திரிமன்னே, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், தில்ருவான் பெரேரா, லாகிரு கமாகே, லக் ஷன் சண்டகன், விஸ்வா பெர்னான்டோ தாஷன் ஷனாகா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), ரோஷன் சில்வா

இந்தியா:

விராட் கோஹ்லி (கேப்டன்), குல்தீப் யாதவ், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, சதேஸ்வர் புஜார், அஜங்யா ரஹானே, கே.எல். ராகுல், விருத்தமான் சாகா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, ஷிகார் தவான், உமேஷ் யாதவ், முரளி விஜய், ஹார்திக் பாண்டியா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sri Lanka drop Kusal Mendis, Kaushal Silva for India Test series
Please Wait while comments are loading...