For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான்கு நாட்கள் உருட்டினார்கள், கடைசி நாளில் சுருட்டினார்கள்!

By Staff

அபுதாபி: பாகிஸ்தான் - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்களின் இறுதியில்,இரு அணிகளும் முதல் இன்னிங்ஸை மட்டுமே முடிவு செய்திருந்தன. ஆனால், கடைசி நாளில், 16 விக்கெட்டுகள் விழ, இலங்கை அபார வெற்றியைப் பெற்றது.

இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, யு.ஏ.இ.,யின் அபுதாபியில் நடந்தது. முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 419 ரன்கள் எடுத்தது.

Srilanka dramatic win

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 422 ரன்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி, 4வது நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு, 69 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று 5வது நாள் ஆட்டம் நடந்தது. இதில், 138 ரன்களுக்கு இலங்கை அணி ஆட்டத்தை இழந்தது. பாகிஸ்தானின் யாசிர் ஷா 51 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஸ்கோருடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தேநீர் இடைவேளையின்போது, 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் 69 எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இலங்கையின் ரங்கனா ஹெராத், 43 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தி, இலங்கைக்கு வெற்றியை உறுதி செய்தார்.

இதில் புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில், 400வது விக்கெட்களை அவர் வீழ்த்தியுள்ளார். தில்ருவான் பெராரா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

நான்கு நாட்கள் உருட்டி உருட்டி விளையாட அணிகள் போட்டி டிராவில் முடியும் என்று நினைத்த நிலையில், கடைசி நாளில் 16 விக்கெட்கள் விழுந்து, இலங்கை 21 ரன்களில் வென்றது.

Story first published: Tuesday, October 3, 2017, 11:52 [IST]
Other articles published on Oct 3, 2017
English summary
Srilanka win the first test against Pakistan with Herath’s magic bowling
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X